இந்திய மக்கள்தான்.. இந்த நாட்டின் பலம்.. வளமான எதிர்காலம் காத்திருக்கிறது- அதானி குழும இயக்குநர்
டெல்லி: அதானி எண்டர்பிரைசஸின் இயக்குநரான பிரணவ் அதானி, இந்தியாவின் முழு திறனை உணரவும், 2047-க்குள் வளர்ந்த நாடாக, அதாவது விக்ஸித் பாரத் ஆக மாறவும் அனைத்து துறைகளிலும் பெரிய அளவிலான மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (CRF) முதல் அறக்கட்டளை நாள் விழாவில் பேசிய அதானி, இந்தியாவின் வளர்ச்சி குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எதிரொலிக்கும் விதமாக பேசினார். .
காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் வர்த்தகத்தில் கவனம்
"இந்தியா தனது முழு திறனையும் உணர்ந்து 2047-க்குள் விக்ஸித் பாரத் ஆக மாறுவதற்கு தேவையான மாற்றத்தின் அளவு மிக பெரியது.. ஆனால் அது சாத்தியப்படக்கூடியதுதான்" என்று பிரணவ் அதானி தனது உரையின் போது கூறினார். இந்த மைல்கல்லை அடைவதற்கு புதுமை, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் கொள்கை ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கவனம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்ட அதானி, இந்த அமைப்பு காலநிலை மாற்றம், சமமான எரிசக்தி மாற்றம், உலக வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை கையாண்டு வருவதாகக் கூறினார்.
"கடந்த மூன்று தசாப்தங்களாக, அதானி குழுமம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னணியில் இருந்து வருகிறது. இதே பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று அதானி குறிப்பிட்டார்.
VIDEO | On first foundation day of Chintan Research Foundation, Adani Enterprises Director Pranav Adani says, "I feel that a research foundation has a lot of responsibilities. Like I said in my speech, the Chintan Research Foundation will focus on three things -- climate change,… pic.twitter.com/1wmbWjJjpy
— Press Trust of India (@PTI_News) June 19, 2025
ANI உடனான கலந்துரையாடலில், பிரணவ் அதானி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை வலிமை குறித்து வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
"இந்தியா இப்போது ஒரு சிறந்த நிலையில் உள்ளது. நமது 140 கோடி மக்களே நமது மிகப்பெரிய சொத்து," என்று அவர் கூறினார். மேலும் அந்த நிகழ்வில் பேசியர்களை மேற்கோள் காட்டி அவர் கூறியதாவது, "நமது மக்கள் தொகையில் 50% மட்டுமே தற்போது ஜிடிபி வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். மீதமுள்ள 50% பேரும் இதில் ஈடுபடும்போது, இந்தியாவின் உண்மையான வளர்ச்சி வெளிப்படும். நாங்கள் ஒரு குழுவாக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்."
இந்திய பிராந்தியங்களில் உள்ளடக்கிய வளர்ச்சி
தேசிய தலைநகருக்கு அப்பால் கொள்கை விவாதங்களை நகர்த்தி பிராந்திய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதானி வலியுறுத்தினார். "டெல்லியைத் தாண்டி நகரலாம். இந்தியா ஒரு நகரம் மட்டுமல்ல - இது ஒரு மாறுபட்ட மற்றும் ஆற்றல்மிக்க நாடு. ராஞ்சி, ராய்பூர், புவனேஸ்வர், போபால், வடகிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகள் போன்ற நகரங்களுக்கு நமது ஆராய்ச்சி விரிவுபடுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
#WATCH | Delhi | Adani Enterprises Director Pranav Adani says, "...India is not only Delhi or the capital cities but India lives in the heartland, that is why I said in my speech that whether it is Ranchi, Raipur, Bhubaneswar or the Northeast, what really matters is this is where… pic.twitter.com/meJV24Tmaj
— ANI (@ANI) June 19, 2025
உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு
இந்தியாவிற்கு அப்பால், மற்ற வளரும் நாடுகளுக்கும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை- சிஆர்எஃப் தனது கொள்கைகளை பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரணவ் அதானி அழைப்பு விடுத்தார். இந்தியா வளரும் போது.. உலகளாவில் நாடுகள் வளரும் , இந்தியா தனது வளர்ச்சி கதையை பகிர்ந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்தியாவின் அனுபவத்தின் அடிப்படையில் உலகளவில் நாடுகளை வளர்க்க சிஆர்எஃப் உதவ முடியும்," என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அதானி குழுமத்தின் சர்வதேச சொத்துக்களின் பாதுகாப்பு குறித்து அதானி கருத்து தெரிவித்தார். "கவலைகள் உள்ளன, ஆனால் வெளிநாடுகளில் உள்ள எங்கள் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. கவலைப்படத் தேவையில்லை," என்று அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து துறைகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவை என்றும், சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை இது தொடர்பாக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பிரணவ் அதானி வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications