டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய உச்சம்..இந்தியாவில் ஒரேநாளில் 82,507 பேருக்கு கொரோனா! மகாராஷ்டிராவில் 17,433 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 82,507 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 17,433 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிக மோசமாகி வருகிறது. இந்தியாவில் புதன்கிழமை ஒருநாளில் மட்டும் 82,507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு- டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 5,891தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு- டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 5,891

இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் பாதிப்பு

இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,48,615 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1026 ஆக இருந்ததால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 67,486.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29,67,396. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 8,13,136.

மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு

மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு

நாட்டில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 17,433 பேருக்கு கொரோனா உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,25,739 ஆகும். புதன்கிழமையன்று 292 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மரணங்கள் எண்ணிக்கை 25,195 ஆகும்.

ஆந்திரா, கர்நாடகா, தமிழகம்

ஆந்திரா, கர்நாடகா, தமிழகம்

மகாராஷ்டிராவை தொடர்ந்து ஆந்திராவில் 10,392 பேருக்கும் கர்நாடகாவில் 9,860 பேருக்கும் புதன்கிழமையன்று கொரோனா உறுதியானது. தமிழகத்தில் 5,990 பேருக்கும் உ.பி.யில் 5,682 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக கர்நாடகாவில் புதன்கிழமையன்று 113 பேர் உயிரிழந்தனர்.

English summary
India recorded a single-day spike of 82,507 new positive cases and 1026 deaths in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X