நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு.. இந்தியா உதவிக்கரம்! 5 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு
டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியா உடனடியாக ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. 5 டன் அளவுக்கு உணவு பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
இன்று காலை ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் சீட்டு கட்டுக்களை போல சரிந்து விழுந்திருக்கின்றன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குனார் மாகாணத்தில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் மீட்டு வரும் நிலையில், மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பல கிராமங்களை அழித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவ வீரர்களுடன் பொதுமக்களும் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆப்கனுக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது x பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நிவாரண பொருட்களில் உணவு பொருட்கள் மட்டும் சுமார் 5 டன் அளவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இது தவிர தற்காலிக கூடாரம் அமைக்க கூரைகள், மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications