ரஷ்யாவை விட்டு இருக்க கூடாது.. இந்தியா மிஸ் பண்ணிடுச்சே.. எச்சரிக்கும் சசி தரூர்.. என்ன சொன்னார்?
டெல்லி: ‛‛உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை இந்தியா கண்டித்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் அமைதி நிலவ இந்தியா காரணமாக இருப்பது நல்லது தானே'' என காங்கிரஸ் எம்பி சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனில் அப்பாவி மக்கள் உள்பட ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர். உக்ரைனின் பதில் தாக்குதலால் ரஷ்யாவுக்கும் வீரர்கள் உயிரிழப்பதோடு, ஹெலிகாப்டர்கள், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன.
இதனால் இருநாடுகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பிற நாடுகளுக்கும் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் நிலைய உருவாகிறது. இதனால் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

மோடி பேச்சு
இந்நிலையில் தான் ரஷ்யாவுடன், நட்பு நாடாக உள்ள இந்தியா இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ‛‛உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையான நிலைப்பாட்டில் உள்ளது. போரை நிறுத்துங்கள். நேட்டோ-ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்'' என கூறினார்.

வருத்தம்
இந்நிலையில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் எம்பியான சசிதரூர் கூறியதாவது: ரஷ்யா நமக்கு நட்பு நாடாக இருக்கலாம். ஆனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அதனை இந்தியா கண்டிக்காமல் மவுனம் சாதிக்கிறது. இதை உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் ஏமாற்றமாக பார்க்கிறது. இந்தியாவின் செயல் அவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

உதவுவது நல்லது தான்
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லை தொடர்பான கோட்பாடுகள் மீறப்படும்போது இந்தியா போன்ற நாடு அமைதியாக இருப்பது சரியல்ல. ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா சமரசம் செய்ய வேண்டும் என உக்ரைன் விரும்புகிறது. உக்ரைனின் விருப்பம் முழுவதுமாக ஏற்றுகொள்ளும் படியாகவே இருக்கிறது. ஒருநாட்டில் அமைதி நிலவ இந்தியா உதவுவது என்பது நல்லது தான்.
Recommended Video

எல்லை மீறி தாக்குதல்
இருநாடுகளும் ஒன்றையொன்று தாக்கும் சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு கூறியிருக்கலாம். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஒரு நாடு மற்றொரு நாட்டின் எல்லையை மீறி சென்று தாக்குகிறது. இதனை இந்தியா கண்டித்திருக்க வேண்டும். ரஷ்யாவின் செயல் தவறு என சுட்டி காட்டிருக்க வேண்டும்.'' என கூறியுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications