பாகிஸ்தானை பதட்டத்துலயே வச்சுருக்கனும்! இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்
டெல்லி: அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக பதற்றங்கள் இன்னும் குறையாத சூழலில், பாதுகாப்புத்துறையை வலுப்படுத்த இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்திய ராணுவத்துக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும், தேஜஸ் ரக போர் விமானங்களுக்கு தேவையான 113 இன்ஜின்களை அமெரிக்காவின் GE Aerospace நிறுவனத்திடமிருந்து வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் இதில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

மேலும் கப்பல் படை அதிகாரி உள்ளிட்டோறும் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது.
ஆபரேஷன் சிந்தூர்
இதற்கிடையே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக, ஆயுதங்களுடன் தாக்கியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.
இந்திய ராணுவம்
அந்த தாக்குதலுக்கு பின், இந்தியா தனது ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பணிகளை பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு சமீபத்தில் அந்த நிறுவனத்துடன் 62,370 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தேஜஸ் போர் விமானம்
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 97 புதிய தேஜஸ் ரக போர் விமானங்களை HAL நிறுவனம் தயாரித்து இந்திய விமானப்படைக்கு வழங்க உள்ளது. 2027-28 நிதியாண்டு முதல் விமான விநியோகம் தொடங்கும் என்றும், அடுத்த ஆறு ஆண்டுகளில் முழுமையாக 97 போர் விமானங்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேஜஸ் ரக விமானங்களில் சுமார் 64 சதவீத பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று HAL தெரிவித்துள்ளது. இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. இது "Make in India" திட்டத்துக்கு ஒரு பெரிய ஊக்கமாக கருதப்படுகிறது.
ஜிஇ ஏரோஸ்பேஸ்
இதற்கிடையில், தேஜஸ் போர் விமானங்களுக்கு அபரிமிதமான சக்தி அளிக்கும் இன்ஜின்களை தயாரிக்க அமெரிக்காவின் GE Aerospace நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 113 இன்ஜின்கள் வாங்கப்படவுள்ளன. விநியோக பணிகள் 2027ஆம் ஆண்டில் தொடங்கி 2032க்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு சமீபத்தில் சில வர்த்தக பிரச்சினைகள் இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்கின்றனர்.
மேக் இன் இந்தியா திட்டம்
இந்த புதிய தேஜஸ் ரக போர் விமானங்கள், நீண்ட ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 விமானங்களுக்கு மாற்றாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்திய விமானப்படையின் பாதுகாப்புத் திறன், தொழில்நுட்ப தன்னிறைவு, மற்றும் உள்நாட்டு தொழில் வளர்ச்சி ஆகியவை புதிய உயரத்தை அடையவிருக்கின்றன. இது இந்திய பாதுகாப்பு துறையின் வரலாற்றிலேயே முக்கியமான முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications