இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு- 311 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 311 பேர் மரணித்துள்ளனர்.
உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையானது 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,62,379 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 311 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 9195 ஆகவும் அதிகரித்துள்ளது.
மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா உயிரிழப்புகளில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் குஜராத் 2-வது இடம்; டெல்லி 3-வது இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications