மறு அறிவிப்பு வரும் வரை.. அமெரிக்காவுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பை தொடர்ந்து, அந்நாட்டுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்திய பொருட்கள் மீது தற்போது 50% அளவுக்கு சீனா வரியை போட்டிருக்கிறது. இந்த வரி காரணமாக இந்திய பொருட்கள் ஏற்றுமதியாகாமல் தேக்கம் அடைந்திருக்கின்றன. எனவே அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை ஆக.29ம் தேதி முதல் நிறுத்துவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

post USA mail

ஆனால், 100 டாலருக்கும் அதிக மதிப்பு கொண்ட பார்சல்கள் வழக்கம்போல ஏற்றுமதியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து அஞ்சல் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அஞ்சல் எடுத்துச் செல்வதில் வரி விதிப்பு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே 100 டாலர் மதிப்புக்கொண்ட பார்சல் உட்பட அனைத்து வகையான அஞ்சல் சேவையும் நிறுத்தப்பட்டிருக்கிறது என இந்திய தபால் துறை தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் கூட அனுப்ப முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக அமெரிக்க அரசு 'டி மினிஸ்' என்கிற ஒப்பந்தத்தை செயல்படுத்தி வந்தது. இந்த ஒப்பந்தம் அமலில் இருந்த போது, ரூ.70,500 மதிப்புக்கு குறைவாக உள்ள பார்சல் பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒப்பந்தம் முடிவடைந்திருப்பதால் பல நாடுகளும் தங்கள் பார்சல் சேவையை நிறுத்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+