Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக். அணு ஆயுதம், சவுதி நிதி, துருக்கி ராணுவம்! முஸ்லீம் நாடுகளின் நேட்டோ! உற்று பார்க்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சவுதி, பாகிஸ்தான் நாடுகள் இடையேயான பாதுகாப்பு உடன்படிக்கையில் இப்போது துருக்கியும் உள்ளே வந்துள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுதம், சவுதியின் பணம், துருக்கியின் ராணுவ நுட்பம் என உருவாகி வரும் இந்த நேட்டோ போன்ற அமைப்பு இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

கடந்தாண்டு சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு உடன்படிக்கை போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கையில், துருக்கியும் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கிட்டத்தட்ட இஸ்லாமிய நாடுகளின் நேட்டோ போல உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

India Takes Note of Islamic NATO Saudi Money Pakistan Nukes Turkish Military as Muslim Bloc

நேட்டோ போன்ற அமைப்பு

இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கையில் நேட்டோ அமைப்பைப் போன்ற சில ரூல்ஸும் உள்ளது. குறிப்பாக நேட்டோ அமைப்பின் 5வது பிரிவில், ஒரு உறுப்பு நாட்டிற்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்று இருக்கும். அதே பாயிண்ட் பாகிஸ்தான்- சவுதி பாதுகாப்பு உடன்படிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சவுதி மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பது இதன் பொருளாகும்.

உள்ளே வரும் துருக்கி

முதலில் சவுதி மற்றும் பாகிஸ்தான் இடையே போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இணைய இப்போது துருக்கி ஆர்வம் தெரிவித்துள்ளது. அதன்படி சவுதி அரேபியா நிதி உதவி வழங்கும்.. பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் தடுப்பு சக்தி, பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன் மற்றும் மனிதவளத்தை வழங்கும். மறுபுறம், துருக்கி தனது ராணுவ நிபுணத்துவம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த TEPAV என்ற வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக TEPAV வல்லுநர் குழுவின் ஓஸ்கான் கூறுகையில், "அமெரிக்கா இப்போது அதன் சொந்த நலன்களுக்கும் இஸ்ரேலின் நலன்களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. இப்போது சர்வதேச அளவில் நிலைமை மாறி வருகிறது. இதனால் பிராந்திய அளவில் நாடுகள் இதுபோன்ற அமைப்புகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் நண்பர்கள் மற்றும் எதிரிகளை அடையாளம் காண முடியும்" என்று குறிப்பிட்டார்.

துருக்கி

துருக்கி இதில் இணைந்ததில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். துருக்கியின் கவனம் தெற்காசியா, மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விரிவடைந்து வருகிறது. இந்த மூன்று நாடுகளும் ஏற்கனவே நெருக்கமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் துருக்கியில் இந்த நாடுகள் தங்களின் முதல் கடற்படை சந்திப்பை நடத்தின.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியின் துருக்கி நீண்ட காலமாகவே உறுப்பு நாடாக இருக்கிறது. மேலும், நேட்டோவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ராணுவத்தை கொண்ட நாடாகவும் துருக்கி இருக்கிறது. ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் சவுதி மற்றும் துருக்கி நாடுகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரு நாடுகளுமே சிரியா மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் ஒரே முடிவை எடுத்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதையே காட்டுகிறது.

நெருங்கிய உறவு

பாகிஸ்தான்- துருக்கி இடையேயான பாதுகாப்பு உறவுகளும் கடந்த சில ஆண்டுகளாகச் சீராக வளர்ந்து வந்தது. பாகிஸ்தான் கடற்படைக்கு கார்பெட் போர்க்கப்பல்களை துருக்கி உருவாக்கி வருகிறது. மேலும், பாகிஸ்தானிடம் உள்ள F-16 போர் விமானங்களை நவீனப்படுத்தவும் துருக்கி உதவுகிறது. மேலும் சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து வருகிறது. துருக்கி தனது 'கான்' எனும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் பங்கேற்கவும் அவர்களை அழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன..

இப்படி 3 நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே புரியல் இருக்கும் சூழலில், அது இந்த பாதுகாப்பு உடன்படிக்கை மூலம் இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று இருக்கிறது. பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ள இந்த நேட்டோ போன்ற செட்அப்பை இந்தியா தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+