குறிக்கப்பட்ட தேதி! கூட்டு சேர்ந்த இந்தியா - அமெரிக்கா! ஸ்டன் ஆன பாகிஸ்தான்! வசமாக வைக்கப்பட்ட ஆப்பு
டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையிலான தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8-ம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பும் அனைத்து விதிமுறைகளுக்கும் உடன்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, இந்திய வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளரும், இந்த பேச்சுவார்த்தை குழு தலைவருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழு வாஷிங்டனில் உள்ளது.

வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் விதித்த கெடு
உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான டிரம்ப்பின் கெடு ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் சரியான நேரத்தில் வந்துள்ளது. டிரம்ப் தனது நிர்வாகம் அனைத்து வர்த்தக தடைகளையும் நீக்க விரும்புவதாக கடந்த வாரம் கூறியிருந்தார்.
முன்னதாக, டிரம்ப் இந்திய இறக்குமதிகள் மீது 26 சதவீத வரி விதிப்பை விதித்தார். பின்னர் இதை ஜூலை 9 வரை நிறுத்தி வைத்தார். அதே நேரத்தில் 10 சதவீத அடிப்படை வரி இன்னும் உள்ளது. கூடுதல் 26 சதவீத வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளன. சமீபத்தில், இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் உருவாகி வருவதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் சூசகமாகத் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் கவனம் செலுத்தும் முக்கிய துறைகள்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முக்கியமாக விவசாயம், வாகனங்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் அதிக தொழிலாளர்களை ஈடுபடுத்தும் உற்பத்திப் பொருட்கள் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
குறிப்பிட்ட தொழில்துறை பொருட்கள், வாகனங்கள் - குறிப்பாக மின்சார வாகனங்கள், ஒயின், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள், பால் மற்றும் ஆப்பிள்கள், மர பொருட்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற விவசாயப் பொருட்களுக்கு அமெரிக்கா வரிச் சலுகைகளை விரும்புகிறது.
இந்தியாவின் கோரிக்கைகள்
இந்தியா ஜவுளி, ரத்தினம் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், ஆடைகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள், இறால், எண்ணெய் வித்துக்கள், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற அதிக தொழிலாளர்களை ஈடுபடுத்தும் துறைகளுக்கு வரிச் சலுகைகளை எதிர்பார்க்கிறது.
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக வரி விதிப்பு தொடர்பான வெளியுறவுக்கொள்கை இறுதி செய்யப்பட உள்ளன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மீது அமெரிக்கா 26 சதவிகித வரி விதிப்பை போடுகின்றது. இதை குறைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. முக்கியமாக இந்தியாவில் நடக்கும் திட்டங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் டெண்டர் எடுக்கும் விதமாக சில சலுகைகள் இந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு 500 பில்லியன் டாலர் அளவிற்கு இதனால் வருவாய் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பாய்ச்சல்
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் சார்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க உள்ளனர். இந்தியாவிற்கு முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தலைகள் விரைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் மீது அமெரிக்கா 29% வரி விதிப்பை மேற்கொண்டு உள்ளது. பாகிஸ்தான் காரணமாக அமெரிக்காவிற்கு 3 பில்லியன் டாலர் வர்த்தக வரி இழப்பு உள்ளது. இதை சரிகட்டும் வகையில், அமெரிக்காவை சமாதானம் செய்யும் வகையில் பாகிஸ்தான் தலைகள் அமெரிக்காவிற்கு விரைந்துள்ளன. இந்தியா அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் பாகிஸ்தான் அவசர அவசரமாக டிரம்ப்பை சந்திக்க முயன்று வருகின்றது.
-
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications