சும்மா சும்மா வேடிக்கை பார்க்க முடியாது.. டிரம்பின் வரி விதிப்பால் கோபமான நிர்மலா சீதாராமன்! அதிரடி
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இது நம் நாட்டை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் தான் ‛‛உலகளவில் பொருளாதாம் மற்றும் புவிசார் அரசியலில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் அதிர்வுகளை தாங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அதேவேளையில் உலகளாவிய முடிவுகளை எடுத்து அதனை செயல்படுத்துவதில் இந்தியா ஆக்டிவ்வாக சுறுசுறுப்பாக இருக்கும்'' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். டெல்லியில் கௌடில்யா பொருளாதார மாநாடு 2025 நடந்தது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலில் நிச்சயமற்ற தன்மை என்பது வளர்ந்து வருகிறது. இது உலக அளவில் விநியோக சங்கிலிகளை பாதிக்கிறது. அதுமட்டுமின்றி விநியோக சங்கிலிகளை மறுவடிவமைப்பு செய்கிறது. அதன்படி பல நாடுகள் தங்களின் வர்த்தகத்தை நாடுகளை மாற்றி வருகின்றன.
இதனால் நிச்சயம் இந்தியா செயலற்று வெறும் பார்வையாளராக இருக்க முடியாது. எனவே உலகளாவிய அளவிலான முடிவுகளை எடுத்து சரியாக்கும் நடவடிக்கையில் இந்தியா சுறுசுறுப்பாக செயல்பட்டு தனது பங்கை வகிக்க வேண்டும். ஏனென்றால் தற்போதைய நிலவும் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கூட நம் நாட்டின் திறன் வலுவாக உள்ளது.
இதனால் எத்தகைய பொருளாதாரம், புவிசார் அரசியலில் நிச்சயமற்ற தன்மையின் அதிர்வு வந்தாலும் அதனை தாங்குவோம். இந்தியாவை எடுத்து கொண்டால் அனைத்து வகையிலும் சிறப்பாக உள்ளது. பொதுவாக நெருக்கடி நிலைகள் என்பது புதிய நடவடிக்கைக்கான முன்னோட்டம் என்பதை பல வரலாறு நமக்கு கற்று கொடுத்துள்ளன. இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்பது எதிர்பாராத பல விஷயங்களை அடைய சாதகமான சூழலாக மாறலாம்.
தற்போதைய அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவது தான் பெரும் சவலாக உள்ளது. வளரும் நாடுகளுக்கு இது ஆசை என்பது மட்டுமின்றி பெரிய தேவையாக உள்ளது. அதனை சாதித்து காட்ட வேண்டும். பொதுவாக வளரும் நாடுகளை எடுத்து கொண்டால் வெளிநாடுகள் எடுக்கும் முடிவு கூட பிரச்சனையாக மாறலாம். இதனால் நாம் நமக்கு தேவையான இடங்களில் சுதந்திர சுயாட்சி நிர்வாகம் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும்'' என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications