பறக்கும் டேங்கர்.. இந்தியா கைக்கு வரும் முக்கிய ஆயுதம்! பாகிஸ்தானுக்கு கிலி
டெல்லி: இந்திய ராணுவம் அமெரிக்காவிலிருந்து மூன்று AH-64E Apache ரக ஹெலிகாப்டர்களைப் பெற உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் ஜூலை 21 அன்று காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திற்கு வந்து சேரும்.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இவை நிலைநிறுத்தப்பட உள்ளன, இது ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்தும். ராணுவத்தின் வான்படையை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்காவிலிருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு, 22 Apache ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்கா மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் விநியோகம் 2020ம் ஆண்டு முடிவடைந்தது. பின்னர், 2020ஆம் ஆண்டில், இந்திய ராணுவம் மேலும் ஆறு Apache ஹெலிகாப்டர்களை வாங்க 600 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் விநியோக காலக்கெடு தாமதமாகியிருந்தது.
Apache ஹெலிகாப்டர் கொள்முதல்
உலகளாவிய விநியோகச் சங்கிலி சிக்கல்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக புதிய ஹெலிகாப்டர்களின் விநியோகம் தாமதமானது. தற்போது இந்திய ராணுவத்திற்கு கிடைக்கும் இந்த புதிய ஹெலிகாப்டர்கள், ஜோத்பூரில் அமைக்கப்பட்ட Apache படைப்பிரிவுக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும். இவை தாக்குதல் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெகெசெத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, Apache ஹெலிகாப்டர்களின் விரைவான விநியோகத்தை வலியுறுத்தியிருந்தார். மேலும், LCA Tejas போர் விமானங்களுக்கான GE F404 என்ஜின்களின் அவசர தேவையையும் சுட்டிக்காட்டினார். இந்த ஆயுத வர்த்தம் இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கூட்டுறவை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
பிற ஹெலிகாப்டர் திட்டங்கள்
Apache தவிர, இந்திய ராணுவம் Rudra மற்றும் Dhruv போன்ற பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களை இயக்குகிறது. Rudra, Dhruv ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்களாகும். இது டாங்கிகள் எதிர்ப்பு மற்றும் நெருங்கிய வான்வழி தாக்குதலுக்கு பயன்படுகிறது. Cheetah மற்றும் Chetak போன்ற இலகுரக ஹெலிகாப்டர்கள் மருத்துவ வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
உள்நாட்டு தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தி வரும் இந்தியா LCH-ஐ உருவாக்கியுள்ளது. இது உயரமான இடங்களில் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2025க்குள் ₹62,700 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் 156 LCH ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதில் 66 விமானப்படைக்கும், 90 ராணுவத்துக்கும் வழங்கப்படும்.
Apache ரக ஹெலிகாப்டர்கள் வானிலை பறக்கும் பீரங்கி போன்றதாகும். இதனால் அனைத்து போர் சூழலையும் எதிர்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications