Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் திடீரென அதிகரித்த வேலையின்மை.. நகரங்களில் தான் நிலைமை மோசமாம்! வெளியான ஷாக் டேட்டா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று அதிகரித்து 5.2%ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இது 5.1%ஆக இருந்த நிலையில், இப்போது அது அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் தான் வேலையின்மை அதிகமாக இருப்பதாகவும் அதில் கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார சிக்கல் அதிகரித்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்பின்மையும் கூட பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் கூட வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது. புவிசார் பதற்றம், பொருளாதார சூழல் என இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவிலும் இப்போது அதே நிலை எதிரொலிக்கிறது.

India Unemployment Rate Rises in September Urban Women Bear Brunt Reveals Job Market Strains

அதிகரித்த வேலைவாய்ப்பின்மை

இது தொடர்பாகப் புள்ளிவிவர அமைச்சகம் முக்கிய டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வேலைவாய்ப்பின்மை கணிசமாக அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4.3% ஆக இருந்த நிலையில், அது செப்டம்பரில் 4.6% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல நகர்ப்புறங்களிலும் வேலையின்மை விகிதம் 6.7%இல் இருந்து 6.8% ஆக அதிகரித்துள்ளது. கிராமங்களைக் காட்டிலும் நகரங்களிலேயே வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு தான் பிரச்சனை அதிகம்

அதிலும் பெண்கள் மத்தியில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறதாம். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டிலும் பெண்கள் மத்தியில் தான் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. நகர்ப்புறங்களில், ஆகஸ்ட் மாதத்தில் 8.9%ஆக இருந்த பெண்களின் வேலையின்மை செப்டம்பரில் 9.3% ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், ஆண்களின் வேலையின்மை 5.9% இல் இருந்து 6% ஆக அதிகரித்தது.

கிராமப்புறங்களில், ஆகஸ்ட் மாதத்தில் 5.2% ஆக இருந்த பெண்களின் வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 5.5% ஆக உயர்ந்தது. ஆண்களுக்கு இது 4.5% இல் இருந்து 4.7% ஆக அதிகரித்துள்ளது.

இரு விதமான பிரச்சனை

இந்தியாவின் தொழிலாளர் சந்தையில் இரு விதமான பிரச்சனை இருப்பதை இது காட்டுகிறது. ஒன்று தொழிலாளர் சந்தையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து குறைகிறது. அத்துடன், நகரங்களை வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் நிலையில், கிராமப்புறங்களில் நிலைமை ஓரளவுக்கு சீராக இருக்கிறது. இது இப்போது நமது நாட்டில் என்ன சூழல் நிலவுகிறது என்பதையே காட்டுகிறது..

LFPR எனப்படும் labour force participation rate சிறிதளவு மட்டுமே அதிகரித்தது.. இது நீடித்த ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் LFPR ஆகஸ்ட் மாதத்தில் 55%ஆக இருந்து செப்டம்பரில் 55.3% ஆக சற்று உயர்ந்தது. கிராமப்புறங்களில், LFPR ஆகஸ்ட் மாதத்தில் 57% ஆக இருந்து செப்டம்பரில் 57.4% ஆக உயர்ந்தது. நகர்ப்புற LFPR செப்டம்பரில் 50.9% ஆக மாறாமல் இருந்தது.

பாலின பாகுபாடு

பாலின அடிப்படையில் பார்க்கும்போது கடந்த செப்டம்பரில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கிராமப்புற ஆண்களின் LFPR 78.1% ஆகவும், கிராமப்புற பெண்களின் LFPR 37.9% ஆகவும் இருந்தது. நகர்ப்புறங்களில் ஆண்களின் LFPR 75.3% ஆகவும், பெண்களின் LFPR வெறும் 26.1% ஆகவும் இருந்தது.. தொழிலாளர் சந்தையில் பாலின பாகுபாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. நாடு முழுக்க எடுக்கப்பட்ட விரிவான சர்வே அடிப்படையில் இந்த ரிப்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+