எதிர்பாராத இடத்திலிருந்து வந்த பிரஷர்! இந்தியா உடனான போட்டியில் யூடர்ன் போட்ட பாகிஸ்தான்.. என்னாச்சு
டெல்லி: இந்தியா உடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்து இருந்தது. இருப்பினும், ஐசிசி உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான் தனது முடிவைக் கைவிட்டது. பாகிஸ்தான் திடீரென யூடர்ன் போட என்ன காரணம்.. எங்கிருந்து எல்லாம் பாகிஸ்தானுக்கு பிரஷர் போனது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை இப்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி வரும் பிப்ரவரி 15ம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்தப் போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் முதலில் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது. இதையடுத்து பாகிஸ்தானுடன் ஐசிசி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி
இந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா உடனான போட்டியில் விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சுமார் ₹4,500 கோடிக்கும் மேலான பிஸ்னஸ் இருக்கிறது. இதனால் போட்டி நடக்காமல் போனால் மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ஐசிசி சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளது. கிரிக்கெட் மனப்பான்மையைப் பாதுகாக்கவே இந்த முடிவு என பாகிஸ்தான் கூறினாலும் கூட ஐசிசி போட்ட பிரஷரால் தான் பாகிஸ்தான் ஜகா வாங்கியதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி
அதாவது முதலில் டி20 போட்டியில் விளையாடவிருந்த வங்கதேசம், இந்தியாவில் விளையாட மறுத்தது. இதனால் வங்கதேசம் டி20 தொடரில் இருந்து விலகியது. வங்கதேசத்திற்கு ஆதரவாகத் திடீரெனக் கிளம்பிய பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட மறுப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வியும் இதை உறுதி செய்தார். இதுவே சர்ச்சைக்குப் பிரதானக் காரணம்.
பிரஷர்
ஆனால், அதன் பிறகு உள்ளே வந்த ஐசிசி, பாகிஸ்தானுக்கு பிரஷர் போட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிடப்பட்ட ஒன்று. அப்படியிருக்கும்போது அரசியல் காரணங்களுக்காக உலகக் கோப்பை போட்டியைப் புறக்கணிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐசிசி எச்சரித்தது. புள்ளிகள் இழப்பு மட்டுமின்றி நிதி அபராதங்கள், ஐசிசி வருவாய் இழப்பு என விளைவுகளைச் சொல்லியுள்ளது. மேலும், கிரிக்கெட்டில் வர்த்தக ரீதியாக பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அதேபோல கிரிக்கெட் தொடரை உலகளவில் பல்வேறு நாடுகளும் ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ளன. இந்தியா பாகிஸ்தான் போட்டியை உலகெங்கும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதால் அது பிரதானமாக இருக்கும். அப்படியிருக்கும்போது போட்டி நடக்காமல் போனால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும். இதனால் ஒளிபரப்ப உரிமம் பெற்றவர்களும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஜகா வாங்கிய பாகிஸ்தான்
ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக முடிவை எடுத்த பாகிஸ்தானுக்கு அதன் பிறகே நிலைமை புரிந்துள்ளது. வெறும் புள்ளி இழப்பு மட்டும் ஏற்படும் என பாகிஸ்தான் நினைத்திருந்தது. ஆனால், ஐசிசி அபராதங்கள், வருவாய் இழப்பு, தனிமைப்படுத்தப்படும் ஆபத்து என விளைவுகள் பெரிதாகப் போனதால் தனது வீம்பை விட்டுக் கொடுத்தது. இந்தியாவுடன் விளையாடச் சம்மதம் எனத் தெரிவித்தது.
அதேநேரம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக கிரிக்கெட் மனப்பான்மையைப் பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தது. ஆனால், உண்மையில் ஐசிசி உட்படப் பல்வேறு தரப்பில் இருந்து வந்த பிரஷர் காரணமாகவே பாகிஸ்தான் யூடர்ன் போட்டதாகக் கூறுகிறார்கள். அரசியல் ரீதியாக என்ன முடிவை எடுத்தாலும் நிதி இழப்பு என்பது பாகிஸ்தானை ஆட்டம் காண வைத்துவிடும் என்பதையே இது உணர்த்துகிறது. அதாவது பாகிஸ்தானின் கொள்கை மாறவில்லை. ஆனால், தனது நிலைப்பாட்டிற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதால் புறக்கணிப்பு முடிவைக் கைவிட்டுள்ளது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications