ஏவுகணையால் கதையை முடிக்கும் இந்தியா? மிரளும் பாகிஸ்தான்.. பிரமோஸ் டூ அக்னி.. யாரிடம் பலம் அதிகம்?
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இருநாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே மோதல் என்பது அதிகரிக்கலாம். இந்த மோதலில் பாகிஸ்தான் மற்றும்
இந்தியா ஆகியவை ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. போர் விமானங்களில் சென்று தாக்கும்போது விமானிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் இஸ்ரேல், ஈரான், காசா, பாணியில் ஏவுகணைகளை இருநாடுகளும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் எந்த நாட்டின் ஏவுகணை வலிமையில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்கமில் சுற்றுலா தலத்துக்குள் நுழைந்து 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மொத்தம் 26 பேர் இறந்தனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் என்பது இருநாடுகள் இடையே கடும்
மோதலை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தான் தாக்குதல் நடத்தி உள்ளதால் நம் நாடு உரிய பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் பாகிஸ்தானுக்கு நிச்சயம் மரணஅடி காத்திருக்கிறது. இந்த மோதல் அதிகரிக்கும் பட்சத்தில் போர் உருவாக கூட வாய்ப்புள்ளது. இந்த முறை இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் அதிகமாக ஏவுகணை தாக்குதலை கையில் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. போர் விமானங்களின் தாக்குதலை போல் ஏவுகணைகள் துல்லியமாக இருக்கும். அதேசமயத்தில் போர் விமானங்களில் தாக்குதல் நடத்தும்போது விமானிகளுக்கு சிக்கல் ஏற்படலாம். ஆனால் ஏவுகணை தாக்குதலை நம் நாட்டின் எல்லையில் இருந்து கொண்டே பாகிஸ்தானின் இலக்குகளை நோக்கி துல்லியமாக அனுப்பி அழிக்க முடியும். இதனை பல எக்ஸ்பர்ட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
இப்போது நமக்கு ஒரு கேள்வி வரலாம். அதாவது ஏவுகணை தொழில்நுட்பத்தில் எந்த நாடு பலம் வாய்ந்தது. இந்தியாவா? பாகிஸ்தானா? இரு நாடுகளிடம் சக்தி வாய்ந்த ஏவுகணை எது? என்ற வினா நமக்கு வரலாம். இதற்கு விடையை இங்கு பார்ப்போம். ஏவுகணை பிரிவை எடுத்து கொண்டால் பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்ததாக உள்ளது. இதில் நம் பக்கம் பாகிஸ்தானால் நெருங்க கூட முடியாது. நம் நாட்டிடம் பிரித்வி 3 ஏவுகணை, பராக் 8 ஏவுகணை, கே 4 ஏவுகணை, அக்னி 5, பிரமோஸ் ஏவுகணை உள்பட பல ஏவுகணைகள் உள்ளன.
பிரித்வி 3 ஏவுகணை
இதில் பிரித்வி 3 ஏவுகணையை எடுத்து கொண்டால் இது Surface to Surface ஏவுகணையாகும். அதாவது நம் மண்ணில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை எதிரிகளின் மண்ணில் உள்ள பயிற்சி மையம் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது ஷார்ட் ரேஞ்ச் ஏவுகணையாகும். இதன் ரேஞ்ச் என்பது 750 கிலோமீட்டர். மொத்தம் 5,600 கிலோ எடை கொண்டது. 9 மீட்டர் நீளம் உடையது. 100 சென்டிமீட்டர் விட்டம் கொண்டது. 7 வகையான வெடிப்பொருட்களை இதில் பயன்படுத்த முடியும். வெடிப்பொருட்கள், ரசாயன ஆயுதம் முதல் அணுஆயுதம் என 500 முதல் 1000 கிலோ எடையை சுமந்து சென்று துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும்.
பராக் 8 ஏவுகணை
அடுத்தது ஏவுகணையின் பெயர் பராக் 8. இது லாங்க் ரேஞ்ச் ஏவுகணை. இது Surface to Air Missile ஆகும். அதாவது தரையில், போர்க்கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணையை ஏவும்போது அது வானில் பறந்து எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை என்பது 275 கிலோ எடை கொண்டது. 4.5 மீட்டர் நீளம் உடையது. 60 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து சென்றுதாக்கும் திறன் கொண்டது. இது புகையின்றி வானில் பறக்கும். அதோடு எதிரிகளின் கண்களுக்கு தெரியாது. இதன் ரேஞ்ச் என்பது 16 முதல் 30 கிலோமீட்டர் தொலைவாகும். ஆனால் அதிக வேகத்தில் பயணிக்கும். மணிக்கு 2,469 கிலாமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது தான் இந்த பராக் 8 ஏவுகணை.
கே 4 ஏவுகணை
இதில் 3 வது ஏவுகணையின் பெயர் கே 4. இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவ முடியும். இது பாலிஸ்டிக் வகையை சேர்ந்தது. இந்த ஏவுகணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது 17 டன் எடை கொண்டது. 12 மீட்டர் நீளம் உடையது. இந்த ஏவுகணையை வைத்து அணுஆயுத தாக்குதல் நடத்த முடியும். இதன் ரேஞ்ச் என்பது 3,500 கிலோமீட்டராகும். மேலும் இந்த ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒருமுறை ஏவிய பிறகு பாதிவழியில் இந்த ஏவுகணையால் பாதையை மாற்றி பயணிக்க முடியும். இந்த
ஏவுகணையின் வேகம் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அக்னி 5 ஏவுகணை
அக்னி 5 ஏவுகணை என்பது இந்தியாவின் அதிகசக்தி வாய்ந்த ஏவுகணையாகும். இந்த ஏவுகணையை கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகையாகும். இதன் ரேஞ்ச் என்பது 5,500 கிலோமீட்டராகும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நம் நாட்டில் இருந்து சீனா மற்றும் பாகிஸ்தானின் எந்த இடத்தை வேண்டுமானாலும் இந்த ஏவுகணை கொண்டு தாக்க முடியும். இதன் எடை என்பது 50 ஆயிரம் முதல் 56 ஆயிரம் கிலோவாகும். இந்த ஏவுகணை 17.5 மீட்டர் நீளம் கொண்டது. 1,500 கிலோ வெடிப்பொருட்கள் மற்றும் அணுஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது பாகிஸ்தானுக்கு நிச்சயம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
பிரமோஸ் ஏவுகணை
பிரமோஸ் ஏவுகணை என்பது மிகவும் ஆபத்தான தாக்குதலை தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகில் மோசமான ஏவுகணைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சூப்பர் சோனிக் குரூஸ் வகை ஏவுகணையாகும். நம் படை பிரிவில் 3 வகையான பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணைகள் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டது. 8.4 மீட்டர் நீளம் கொண்டது. 200 முதல் 300 கிலோ அணுஆயுதத்ததை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது. இதன் ரேஞ்ச் என்பது 400 முதல் 700 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த ஏவுகணையின் சிறப்பு என்னவென்றால் தரை மற்றும் கடலில் இருந்து வெறும் 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் இலக்கை தாக்கி அழிக்கும். மேலும் இதன் வேகம் என்பது மணிக்கு 4,939 கிலோமீட்டராகும். அதேபோல் பாதிவழியில் இந்த ஏவுகணையின் திசையை மாற்றி அமைக்க முடியும் என்பதால் தான் இது மிகவும் மோசமான ஏவுகணையாக உலகில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஏவுகணைகள்
அதேபோல் பாகிஸ்தானை எடுத்து கொண்டாலும் அந்த நாட்டிடம் சில முக்கிய ஏவுகணைகள் உள்ளது. Hatf7/Babur என்ற ஏவுகணை என்பது பாகிஸ்தானின் டாப் 5 ஏவுகணையில் 5வது இடத்தில் உள்ளது. இது மீடியம் ரேஞ்ச் சப் சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். 1,500 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை 6.2 மீட்டர்நீளம் கொண்டது. இது 450 முதல் 500 கிலோ வெடிப்பொருள் அல்லது அணுஆயுதத்தை சுமந்து செல்லும். மொத்தம் 7 வகையில் இந்த ஏவுகணை உள்ளது. இதன் ரேஞ்ச் என்பது 900 கிலோமீட்டர் ஆகும். மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ஏவுகணையை சமாளிக்க நம் நாட்டின் நிர்பய் ஏவுகணை போதுமானது. அதன் ரேஞ்ச் என்பது 1,500 கிலோமீட்டராகும். அது மணிக்கு 1,110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
ஷாகின் 1 ஏவுகணை
அடுத்ததாக Hat 4/Shaheen -1 ஏவுகணையை பாகிஸ்தான் வைத்துள்ளது. இது 750 முதல் 100 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது. 12 மீட்டர் நீளத்ில் 10 ஆயிரம் கிலோ எடையுடன் உள்ளது. இது 1000 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து செல்லும். இது ஷார்ட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை வகையை சேர்ந்தது. கடந்த 2013 ஏப்ரல் 10ம் தேதி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு எந்த சோதனையையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை.
இந்த வரிசையில் அடுத்து இருக்கும் ஏவுகணையின் பெயர் Hatf - 5/Ghauri. இந்த ஏவுகணை என்பது மீடியம் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை. 15.90 மீட்டர் நீளத்தில், 5,850 கிலோ எடை கொண்டது. இது 1,500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இந்த ஏவுகணை கடந்த 2015ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது.
ஷாகின் 3 ஏவுகணை
இதில் 4வது ஏவுகணையின் பெயர் Hatf -6/shaheen 2. இது 2,500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க கூடியது. 25 ஆயிரம் கிலோ எடை கொண்டது. 300 கிலோமீட்டர் உயரம் வரை செல்லும் திறன் கொண்டது. 17.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணையின் விட்டம் 1.4 மீட்டராகும். இது அணுஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது. வேகம் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ஏவுகணை என்பது Shaheen - 3. 19.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏகணை 2,750 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் நம் நாடு, சீனாவின் எந்த இடத்தை வேண்டுமானாலும் தாக்க முடியும். இதன் வேகம் மற்றும் தாக்கும் திறன் உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை கடந்த 2022ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது.
ஏவுகணையை அழிக்கும் ஆயுதம்
பாகிஸ்தான் இப்படி ஏவுகணைகளை வைத்திருந்தாலும் கூட இந்தியாவை ஒப்பிடும்போது அதன் பலம் குறைவு தான். குறிப்பாக நம் நாட்டில் ஏவுகணையை முன்கூட்டியே கணித்து அழிக்கும் ஆயுதங்கள் உள்ளது. இதனால் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நம்மால் எளிதாக வானிலேயே அழிக்க முடியும். ஆனால் பாகிஸ்தானிடம் அத்தகைய தொழில்நுட்பம் என்பது இல்லை. இதனால் ஏவுகணை தாக்குதல் என்று வந்தால் பாகிஸ்தானை நம் நாடு பந்தாடிவிடும் என்பது உறுதி.
-
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications