"பேரழிவு.." அதுவும் 80% இந்தியாவுக்கு ஆபத்து.. நம்ம சென்னை கூட மூழ்கலாம்! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
டெல்லி: பூமியின் வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் கூட இமயமலையில் மிக மோசமான வறட்சி ஏற்படும் என்றும் அது ஆண்டுக் கணக்கில் நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் ஏற்படும் பகீர் மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளது.

'காலநிலை மாற்றம்' காரணமாகப் புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் போது அது உலகெங்கும் மனிதர்களுக்கு மட்டுமின்றி இயற்கைக்கும் மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக எச்சரிக்கிறார்கள்.
எந்த நாடுகள்: இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். புவி வெப்பமடைதல் காரணமாக வெப்பம் ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும் போதும் பூமியில் கூடுதலாக வறட்சி, வெள்ளம், விளைச்சல் குறைவு ஆகியவை அதிகம் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அப்படி புவி வெப்பமடைதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் கூட இமயமலைப் பகுதியில் சுமார் 90 சதவிகிதம் வறட்சி ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ககன்யான் இருக்கட்டும்! சந்திரயான் 4 எப்போ தெரியுமா? உலக நாடுகள் செய்யாததை சாதிக்க போகும் இந்தியா
பூமியின் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது விவசாய நிலங்களில் மிக பெரிய வறட்சி ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான விவசாய நிலங்களில் அடுத்த 30 ஆண்டுகளுக்குக் கடுமையான வறட்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்புகள் மோசமாக இருக்குமாம்.
பாதிப்பைக் குறைக்கலாம்: அதேநேரம் இந்தியாவில் வெப்ப அழுத்தம் காரணமாக மனிதர்கள் பாதிக்கப்படுவதை சுமார் 80 சதவிகிதம் தவிர்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது பூமியின் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தால் தான் இந்த பாதிப்புகள் ஏற்படும். அதேநேரம் பூமி வெப்பமடைவதை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தினால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும், வறட்சி ஏற்படுவதை 20 முதல் 80% வரை குறைக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகரந்தச் சேர்க்கை 3-4 டிகிரி புவி வெப்பமடைதலுடன் பாதியாகக் குறைந்துள்ளது, அதை ஒப்பிடும்போது 1.5 டிகிரி காலாண்டில் குறைந்துள்ளது. எனவே, வெப்ப மயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆய்வு அழைப்பு விடுத்துள்ளது, இது நாட்டின் பாதிப் பகுதியைப் பல்லுயிர் பெருக்கத்திற்கான புகலிடமாகச் செயல்பட அனுமதிக்கும், இது 6 சதவீதமாக 3 டிகிரி ஆகும்.
கட்டுப்படுத்த முடியும்: எனவே, புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் 21 சதவீதமும், எத்தியோப்பியாவில் 61 சதவீதமும் வறட்சிக்கு விவசாய நிலங்களின் வெளிப்பாடு குறைக்கப்படலாம்.
மேலும், இந்த புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவில் மகரந்தச் சேர்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்படலாம். 3-4 டிகிரி புவி வெப்பமயமாகும் போது மகரந்தச் சேர்க்கை சரிபாதியாகக் குறையும். மகரந்தச் சேர்க்கை குறைந்தால் விவசாய உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தினால் பாதிப்பு கால் பகுதியாக மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புகள் மோசமாக இருக்காது.
புவி வெப்பமடைதலைக் குறைப்பது என்பது பொருளாதார சேதங்களைக் குறைக்கும். புவி வெப்பமடைதல் காரணமாகக் கடலோர பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. அதாவது சென்னை போன்ற கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இதனால் கணக்கிட முடியாத அளவுக்குப் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications