சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது ஏன்.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக விளக்கம்
டெல்லி: பாகிஸ்தான் நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த இந்தியா, அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக கூறியுள்ளது. இதுபற்றி முறையாக பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பி உள்ளது மத்திய அரசு. என்னென்ன காரணங்களுக்கு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கடிதத்தில் மத்திய அரசு விளக்கி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும் சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-ந்தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். சுற்றுலா விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை. முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசு சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து பாகிஸ்தானும் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கவும் தடை விதித்தது. பாகிஸ்தானும் வாகா எல்லையை மூடியது.. சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஆனால் இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான்நாட்டிற்கு கடிதம் எழுதியுள்ள இந்தியா, ஏன் சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விளக்கி உள்ளது.
நேற்று மாலை மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில், பாகிஸ்தான் நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் சையது அலி முர்துசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், "ஒரு ஒப்பந்தத்தை நல்லெண்ணத்துடன் மதிக்க வேண்டிய கடமை தான்..எந்த ஒரு ஒப்பந்தத்திற்கும் அடிப்படையானது. அனால் அதற்கு பதிலாக நாம் கண்டது இந்தியாவின் அங்கமான ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மீது பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது.
மேலும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து (சிந்து நதி ஒப்பந்தம்) ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளில் அடிப்படை மாற்றங்கள் காரணமாக எழுந்துள்ள சில பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவின் முயற்சிகளை பாகிஸ்தான் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கணிசமாக மாறிவிட்ட மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், மின்னாற்றாலை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் ஒப்பந்தத்தின் கீழ் நீர் பகிர்வுக்கு அடிப்படையான அனுமானங்களில் பிற மாற்றங்கள் உள்ளிட்ட சில அடிப்படை மாற்றங்களும் இந்த பிரச்சனைகளில் அடங்கும்..
மேலும், தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதம் "நிச்சயமற்ற தன்மைகளுக்கு" வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதை நேரடியாகத் தடுக்கிறது. மேலும் பாகிஸ்தான் செய்த பிற அத்து மீறல்களைத் தவிர, ஒப்பந்தத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக இந்தியா வைத்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் பதிலளிக்க மறுத்துவிட்டது, இது ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணங்களை கூறித்தான் பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக முறைப்படி இந்தியா கடிதத்தில் கூறியுள்ளது. இதனிடையே இன்று.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் நீர் ஒப்பந்தம் குறித்த ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் உட்பட மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications