பூம்! ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய கேம்ப் அழித்தொழிப்பு! இதுதான் மெயின்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் அட்டாக்கில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குள் 18 கி.மீ உள்ளே அமைந்துள்ள இந்த முகாமை அழித்தொழித்துள்ளது இந்திய ராணுவம்.

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

Indian Army Hits Hizbul Mujahideen s Mehmoona Joya Camp a Key Terror Hub

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.

ஆபரேஷன் சிந்தூர்

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக 150 கி.மீ தொலைவில் உள்ள பஹவல்பூரில் இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் புல்வாமா தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் இங்கிருந்து திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைக் கருத்தில் கொண்டே இந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பஹல்காம் அட்டாக்கிற்கு பதிலடியாக 9 தீவிரவாத முகாம்களை சூறையாடியுள்ளது இந்திய ராணுவம்.

3 பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர் இ தொய்பாவின் 3 இலக்குகள், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் 2 இலக்குகள் அழிக்கப்பட்டு உள்ளன.

அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்கள்

  • மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)
  • மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)
  • மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
  • ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)
  • சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)
  • மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)
  • மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)
  • சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)
  • மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

வீடியோ ஆதாரங்கள் வெளியீடு

ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இருவரும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை தேர்வு செய்தது தொடர்பாக விளக்கம் அளித்தனர். மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டனர்.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்திய விமானப் படையின் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தீவிரவாத முகாம்கள் தாக்கப்படுவது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு அவர்கள் விளக்கி உள்ளனர்.

மெஹ்மூனா ஜோயா கேம்ப் அழிப்பு

அந்தவகையில், கர்னல் சோபியா குரேஷி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும்போது, ​​பாகிஸ்தானுக்குள் 12-18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம் உட்பட அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களைக் காட்டும் வீடியோக்களை காட்டி விளக்கினர்.

இது ஹிஸ்புல் முஜாஹிதீனின் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றாகும். ஜம்மு, கதுவா பகுதியில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையங்களில் இதுவும் ஒன்று. பதான்கோட் விமானப்படை தள முகாம் மீதான தாக்குதலை இந்த பயங்கரவாத கேம்ப் தான் திட்டமிட்டு நடத்தியது. இந்த மெஹ்மூனா ஜோயா பயங்கரவாத முகாம், 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் அழிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+