"நாகஸ்த்ரா-1.." இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தற்கொலை படை டிரோன்! பார்த்தாலே மிரள வைக்குதே
டெல்லி: இந்தியா ராணுவத்தில் விரைவில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நாகஸ்த்ரா-1 என்ற தற்கொலைப் படை டிரோன் சேர்க்கப்பட உள்ளது. அதென்ன நாகஸ்த்ரா-1 டிரோன்.. இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக இந்தியா ராணுவம் இருந்து வருகிறது. உலக நாடுகளுக்கு இணையான பல அதிநவீன ஆயுதங்களை இந்தியா தனது ராணுவத்தில் சேர்த்து வருகிறது

இதற்கிடையே அடுத்த கட்டமாக நமது ராணுவம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் 'ஆத்மநிர்பர்தா' என்பதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
இந்திய ராணுவம்: இந்த 'ஆத்மநிர்பர்தா' திட்டத்தின் பல திட்டங்களை இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ளது. இதற்கிடையே மிக முக்கிய மைல்கல்லாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலைப் படை டிரோன் ஆயுதமான நாகஸ்த்ரா-1ஐ விரைவில் இந்தியா ராணுவத்தில் சேர்க்க இருக்கிறது. நாக்பூரில் உள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த தற்கொலைப் படை டிரோன்களை உருவாக்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த ரகத்தில் சுமார் 480 ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது.
இது தொடர்பான இறுதிக் கட்ட ஆய்வு கடந்த மே 20-25 தேதிகளில் நிறைவடைந்த நிலையில், புல்கானில் உள்ள ராணுவ தளத்திற்கு இப்போது முதற்கட்டமாக 120 டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாகாஸ்ட்ரா-1 டிரோன்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமான தாக்குதல்கள் நடத்துகிறது.. இரண்டு மீட்டர்கள் வரை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் சிறப்பை இது பெற்றுள்ளது.
அழிக்கும் திறன்: 9 கிலோ எடையுள்ள இந்த டிரோன்களை ராணுவத்தில் உள்ள வீரரே எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். ஒரு முறை பறக்கத் தொடங்கினால் சுமார் 30 நிமிடங்கள் வரை இதனால் தொடர்ந்து பறக்க முடியும். மேலும், 15 கிமீ தொலைவில் உள்ள டார்கெட்களையும் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கும் திறன் இதற்கு இருக்கிறது. autonomous மோடில் இதன் திறனை 30 கிமீ வரை நீட்டிக் முடியும்.
சத்தமே வராது: இதில் மின்சார உந்துவிசை அமைப்பு இருப்பதால்.. நாகஸ்த்ரா-1 பாயும் போது மிகக் குறைந்த ஒலி மட்டும் வரும்.. மேலும் இது 200 மீட்டருக்கும் மேல் பறந்தால் இதை ரேடார் மூலமும் கண்டறிய முடியாது.. இப்படியொரு டிரோன் தாக்க வருகிறது என்பதை எதிரிகள் உணரும் முன்பே மிஷனை நாகஸ்த்ரா-1 வெற்றிகரமாக தாக்கி முடித்துவிடும்.
பகல் நேரங்கள் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய சிறப்பு கேமராக்கள் இந்த டிரோன்களில் பொருத்தப்பட்டுள்ளது.. மேலும், இலக்குகளைத் தாக்கும் போது வெடித்துச் சிதற 1 கிலோ ஆயுதங்களையும் இது ஏற்றிச் செல்லும். ஒரு வேலை தவறான இலக்கை நோக்கி டிரோன்கள் தெரியாமல் லான்ச் ஆகிவிட்டாலும் கடைசி நேரத்தில் அதை நிறுத்தும் வசதியும் இதில் இருக்கிறது.
தனி சிறப்பு: உலகெங்கும் இதுபோன்ற டிரோன்கள் இருக்கிறது என்றாலும் அவற்றை ஒரு முறை மட்டும் பயன்படுத்த முடியும். ஆனால் இந்த நாகஸ்த்ரா-1 டிரோன்களில் பாராசூட் வசதி இருக்கிறது. இதன் மூலம் ஒரு முறை பயன்படுத்திய டிரோன்களையே நம்மால் மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இதுவே மற்ற டிரோன்களில் இருந்து இதைத் தனித்துக் காட்டுகிறது.
இந்த நாகஸ்ட்ரா-1வின் மொத்த எடையே 30 கிலோ தான். இதை ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவரால் மிக எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். நமது நாட்டின் வடக்கு பகுதியில் டிரோன் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்க இந்த நாகஸ்த்ரா-1 டிரோன்கள் உதவும் என்றே ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications