லடாக்கில் 15,000 அடி உயரத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை.. இந்தியாவுக்கு வெற்றி! சீனாவுக்கு சிக்கல்
ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் லடாக்கில் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் சீனா, இந்த சோதனையை கவலைக்குரியதாக பார்க்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்த சோதனை, 'பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்' (DRDO) மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, ராணுவ வான் பாதுகாப்பு மூலம் 15,000 அடிக்கு மேல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு DRDOவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் விமான பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு முக்கிய ஊக்கமாக, இந்திய ராணுவம் நேற்று உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் தரை-வான் ஏவுகணை அமைப்பின் உயர்-உயர சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஏவுகணைகள் அரிதான வளிமண்டலத்தில் வேகமாக நகரும் வான் இலக்குகளை இருமுறை நேரடியாக தாக்கி, தீவிர நிலைமைகளில் அமைப்பின் செயல்திறனை நிரூபித்தன. ஆகாஷ் பிரைம் ராணுவத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது ஆகாஷ் ரெஜிமென்ட்களின் ஒரு பகுதியாக சேர்க்கப்படும்.
இந்த அமைப்பு ஏற்கனவே ஆபரேஷன் சிந்துரின்போது தனது செயல்பாட்டு வெற்றியை நிரூபித்தது, அங்கு சீன ஜெட் விமானம் மற்றும் துருக்கி டிரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவியது" என்று கூறியுள்ளனர்.
லடாக்கில் இந்தியாவுக்கு கூடுதல் ராணுவ பலம் தேவைப்படுகிறது. சர்வதேச சூழலில் தற்போது சீனாவும், பாகிஸ்தானும், வங்கதேசமும் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன. இப்படி இருக்கையில், நம்முடைய ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த சூழலில்தான் இந்திய ராணுவம் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அம்சத்தை பரிசோதித்திருக்கிறது. அதுவும் 15,000 உயரத்தில் இதை பரிசோதித்தன் மூலம், அனைத்து காலநிலைக்கும் இது ஏற்றதாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கமான பகுதிகளில் வான் பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுவதற்கு சிறப்பான தொழில்நுட்பங்கள் அவசியமில்லை. ஆனால், லடாக் போன்ற உயரமான பகுதியில், காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும். அங்கு வான் பாதுகாப்பு அம்சம் செயல்பட சில நவீன தொழில்நுட்பங்கள் அவசியம். இதெல்லாம் 'ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அம்சத்தில்' செய்யப்பட்டிருக்கிறது. கடுமையான குளிர் பிரதேசங்களிலும் இதன் செயல்திறன் 100% நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இது போர் விமானங்கள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இது ஒரு நடுத்தர தூர வான் பாதுகாப்பு அம்சமாகும். அதாவது 25-35 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். அதேபோல, ஒலியை விட 2.5 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்பதால் இலக்குகள் தப்பிக்க வாய்ப்பு குறைவு. மட்டுமல்லாது பல இலக்குகளை இது ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
உள்நாட்டில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்டிருப்பதால் முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும். சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இது சரியான பதிலடியை கொடுக்கும் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஏற்கெனவே லடாக் பகுதியில் இந்தியா-சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இப்படி இருக்கையில் இந்தியா ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை பரிசோதித்திருப்பது சீனாவின் கவனத்தை நம் பக்கம் திருப்பியிருக்கிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications