டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிரிக்கெட் வீரர்களை மொத்தமாக வாரி அள்ளும் பாஜக? ஜடேஜா மாதிரி பாண்டியா? அமித் ஷா திடீர் மீட்டிங்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா இருவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளனர். இதனால் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா விரைவில் நியமிக்கப்படுவார் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகாததால் ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி உருவாக்கப்பட்ட நாள் முதலே ஹர்திக் பாண்டியாவின் முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் குஜராத் அணியின் கேப்டனாக முன் நின்று கோப்பையை வென்ற பின், இந்திய அணிக்காகவும் சில தொடர்களில் ஹர்திக் பாண்டியா தலைமை தாங்க தொடங்கினார்.

2022 இன் கடைசி வானிலை ரிப்போர்ட்.. இன்று மழைக்கு வாய்ப்பு! ஜனவரி 3 முதல் அடுத்த ரவுண்டு ஸ்டார்ட் 2022 இன் கடைசி வானிலை ரிப்போர்ட்.. இன்று மழைக்கு வாய்ப்பு! ஜனவரி 3 முதல் அடுத்த ரவுண்டு ஸ்டார்ட்

அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா கூடுதல் பொறுப்புடன் விளையாடினார் என்றும் சொல்லலாம். இதனிடையே இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாமல் திணற, ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் கேப்டனாகும் ஹர்திக்

விரைவில் கேப்டனாகும் ஹர்திக்

தோனியை போல் சுயம்பாக முன்னேறி வந்தவர் என்பதோடு, களத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவுடன் செயல்படும் தன்மையால் ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா தான் இனி இந்திய டி20 அணியை வழிநடத்தப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷா - ஹர்திக் சந்திப்பு

அமித் ஷா - ஹர்திக் சந்திப்பு

இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா இருவரும் சந்தித்துள்ளனர். ஹர்திக் மற்றும் குருணால் பாண்டியா சகோதரர்கள் இருவரையும் நேரடியாக சந்திக்க அழைத்துள்ளார் அமித் ஷா. கிரிக்கெட் வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பது சாதாரண விஷயம் தான் என்றாலும், அண்மைக் கால சம்பவங்கள் சாதாரணமாக இருக்கவில்லை.

இருவரையும் இணைக்கும் குஜராத்

இருவரையும் இணைக்கும் குஜராத்

அமித் ஷா மற்றும் பாண்டியா சகோதரர்கள் இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமித் ஷா செயல்பட்டிருக்கிறார். அவரது மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் உயர் பொறுப்பிலும் இருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியா - அமித் ஷா சந்திப்பு ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

இந்திய வீரர் ஜடேஜா

இந்திய வீரர் ஜடேஜா

ஏற்கனவே இந்திய அணி வீரர் ஜடேஜா, தனது மனைவிக்காக பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார். குஜராத் மாநில தேர்தல் நேரத்தில் ஜடேஜாவின் கிரிக்கெட் புகழ், பாஜகவுக்கு சாதகமாக இருந்தது என்றும் பார்க்கப்பட்டது. இதனால் ஹர்திக் மற்றும் குருணால் பாண்டியாவும் ஜடேஜா வழியில் பாஜகவுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பாஜகவில் விளையாட்டு பிரபலங்கள்

பாஜகவில் விளையாட்டு பிரபலங்கள்

முன்னதாக தெலங்கானா மாநில இடைத்தேர்தலின் போது பாஜக தலைவர்கள் பலரும் பிவி சிந்து, மிதாலி ராஜ் உள்ளிட்ட விளையாட்டு வீராங்கனைகளை சந்தித்தனர். ஏற்கனவே பேட்மிண்டன் வீராங்கனை சாய்னே நேவால் பாஜகவில் இணைந்திருக்கிறார். அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் எம்பி-யாக இருக்கிறார். இதனால் அடுத்தடுத்து பாஜக பிரபலங்களை சந்திப்பது பேசுபொருளாகியுள்ளது.

English summary
Indian cricketers Hardik Pandya and Krunal Pandya have met Home Minister Amit Shah. Due to this, the fans are expecting that Hardik Pandya will be appointed as the full-time captain of the Indian team soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X