கடன் வாங்கிவிட்டு திருப்பி தராத பிரிட்டிஷ் அரசு.. 100 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் கேட்கும் இந்தியர்
டெல்லி: மத்திய பிரதேசத்தில் 1917ஆம் ஆண்டு தன் தாத்தாவிடம் பிரிட்டிஷ் அரசு வாங்கிய ரூ.35,000 வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், தற்போது வட்டியும் முதலுமாக அந்த தொகையை தர வேண்டும் எனக்கூறி பிரிட்டிஷ் அரசு மீது லீகல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக பேரன் விவேக் என்பவர் அறிவித்துள்ளார். தற்போது இந்த தொகை 12 கோடிக்கு மேல் வரும் என்று சொல்லப்படுகிறது.
உலகில் பெரும்பலான இடங்களை ஆங்கிலேயார்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த காலமும் உண்டு. சூரியனே மறையாது என்று சொல்லும் அளவிற்கு ஆங்கிலேயேர்கள் வசம் இருந்த நாடுகள் எண்னிக்கை உலகின் பல மூலைகளிலும் இருந்தன.

35 ஆயிரம் கடன் வாங்கினர்
இந்தியாவையும் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை ஆங்கிலேயர்கள் சுரண்டி சென்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ஆங்கிலேயர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் தாத்தாவிடம் 35 ஆயிரம் ரூபாய் ஆங்கிலேயர்கள் கடனாக வாங்கியதாகவும் அதற்கான ஆவணத்தை வெளியிட்டு, அந்த தொகையை தற்போது திரும்ப கேட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
கடந்த 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 109 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, இந்தியாவில் கடும் எதிர்ப்பையும் அகிம்சை போராட்டத்தையும் எதிர்கொண்டு இருந்த கால கட்டத்தில், மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள ஷேஹோர் என்ற பகுதியில் உள்ள சேத் ஜும்மலால் ருதையா என்ற செல்வந்தரிடம் இருந்து 35 ஆயிரம் கடனாக வாங்கினார்களாம்.
கடனை திருப்பி தரவில்லை
35 ஆயிரம் என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய தொகையாகும். இந்த பணத்தை வைத்து பிரிட்டிஷார் தங்களின் எஸ்டேட்களை வடிவமைக்கவும், தங்களின் காலனித்துவ பகுதிகளில் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும் போதுமானதாக இருந்தது என்று கூறும் ருதியா குடும்பத்தினர், கடனை வாங்கியதோடு சரி அந்த கடனை அவர்கள் திருப்பி தரவே இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் அரசுக்கு வக்கீல் நோட்டீஸ்
தற்போது 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், சேத் ஜ்ம்லால் பேரன் விவேக் ருதியா, அந்த கடனை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக பிரிட்டிஷ் அரசுக்கு சட்டடப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்ப தயாராகி வருகிறராம்.

இது தொடர்பாக விவேக் ருதியா கூறுகையில், "சமீபத்தில் ஆவண சான்றை எனது குடும்பத்தினர் கண்டுபிடித்தார்கள். எனது தாத்தா பிரிட்டனுக்க்கு கொடுத்த 35 ஆயிரம் கடன் தற்போது வரை திருப்பி கொடுக்கவில்லை. போர் கடன் என்ற பெயரில் இந்த கடன் வாங்கப்பட்டுள்ளது. பின்னர் கடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வட்டியோடு சேர்த்து 12 கோடி ரூபாய்
எனினும் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1937ல் எனது தாத்தா இறந்துவிட்டார். அதன்பிறகு அந்த தொகை திருப்பி வழங்கப்படவில்லை. சர்வதேச சட்டங்களின் படி, இந்த தொகையை திரும்ப பெறுவது சாத்தியமா? என்று சேத் குடும்பத்தினர் ஆராய்ந்து வருகிறார்களாம். 109 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட அந்த கடன் தொகையை வட்டியுடன் கணக்கிட்டால் 12 கோடிக்கும் மேல் வரும் என்று சொல்கிறார்கள்.
இந்த தொகையை திரும்ப பெறுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் சட்ட ரீதியில் மிகவும் சிக்கலானது என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். சுதந்திரத்திற்கு முன் காலனித் ஆட்சி அதிகாரிகளுக்கும் தனிநபர்களுக்கும் இடையே நடந்த பரிவர்த்தனைகள் தொடர்புடையதாக இருப்பதால், இதில் செட்டில்மெண்ட் ஆவது என்பது அரிதான ஒன்று என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications