8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர்! பயணத்திற்கான காரணம் இதுதான்
டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (SCO) பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அக்.15,16 தேதிகளில் பாகிஸ்தானுக்கு செல்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்கெனவே பல பிரச்னைகள் இருக்கின்றன. உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, எதிர்க்கட்சிகளை கொம்பு சீவி விடுவதை போன்ற வேலைகளை பாகிஸ்தான் செய்து வருந்திருக்கிறது. எனவே இந்தியா பாகிஸ்தானை பெரியதாக கண்டுக்கொள்வதில்லை. இப்படி இருக்கையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறும். இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனவே இதில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இந்தியா தவிர, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் உறுப்பினராக இருப்பதால், இந்த நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
அக்டோபர் 15,16 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கிறது. இதில், உறுப்பு நாடுகளுக்கிடையே நிதி, பொருளாதார, சமூக கலாச்சார மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படும். ஆனால், உண்மையில் சமீப ஆண்டுகளாக இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மீது பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. காரணம், சீனா மற்றும் பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கம்தான்.
எல்லை பிரச்னையில் இரு நாடுகளும் இந்தியாவுக்கு போதிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. மட்டுமல்லாது, காங்கிரஸ் ஆட்சியில் பின்பற்றப்பட்ட வெளியுறவுத்துறை கொள்கைகள் தற்போது மாற்றப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. ஷாஹ்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்த நாடுகளுக்கு எல்லாம் பெரிய எதிரி. எனவேதான் இந்த அமைப்புடன் இந்தியா பெரியதாக தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.
மறுபுறம் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வதால் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். அவருக்கு பிறகு தற்போது ஜெய்சங்கர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications