அந்தரங்க தகவல்களை ஆட்டைய போடும் சீனா! கடிவாளம் போடும் இந்தியா! ட்ரூ காலருக்கு போட்டியாக வரும் C-Nap!
டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய செயலிகளை உருவாக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் ட்ரூ காலர் செயலிக்கு பதிலாக புதிய செயலியை மத்திய அரசு உருவாக்கி உள்ள நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 70% மேற்பட்ட மக்கள் தொலைபேசி வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதனால் எந்த அளவுக்கு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவுக்கு சைபர் தாக்குதல்களும் நடக்கிறது.

ஏற்கனவே சீனா பல்வேறு செயலிகளின் வழியாக இந்திய நபர்களின் தகவல்களை திருடி சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே டிக் டாக், பப்ஜி உள்ளிட்ட பல செயல்கள் தடை செய்யப்பட்டன.
இந்த நிலையில் சைபர் தாக்குதல்களில் சிக்கிக் கொண்டாலும் பெரும்பாலானோர் அதனை வெளியே சொல்வதில்லை. நிதி ரீதியான இழப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற சைபர் தாக்குதல்களால் மக்கள் இதனை வெளியே சொல்ல தயங்குகின்றனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், சட்ட விரோத பரிமாற்றம், போதை பொருள் பார்சல் வந்திருப்பதாக டிஜிட்டல் அரஸ்ட் என 24 வகையான சைபர் குற்றங்கள் தற்போது பட்டியலிடப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும்போது உடனடியாக சைபர் க்ரைம் காவல்துறையிலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிலோ புகார் அளிக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். தற்போது ஒரு ரூபாய்க்கு ஹெட்செட், 100 ரூபாய்க்கு செல்போன் என பல போலி விளம்பரங்களும் லிங்குகளும் உதவுகிறது. அதனை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் உடனடியாக திருடப்படும்.
மேலும், உங்கள் தனிநபர் தகவல்கள் அந்தரங்க புகைப்படங்களும் கொள்ளை போகலாம். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் சைபர் க்ரைம் நிபுணர்கள். இந்த நிலையில் மத்திய அரசு பொது மக்களுக்கு சைபர் குற்றங்களை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய செயலிகளை உருவாக்க முடிவு செய்து இருக்கிறது. குறிப்பாக சீனாவை சேர்ந்த ட்ரூ காலர் செயலி நம்பகத் தன்மையற்ற அப்ளிகேஷன் ஆக உள்ளது. அதே நேரத்தில் வேறு வழியின்றி மக்கள் அதனை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் அது மிகவும் ஆபத்தானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ட்ரூகாலர் செயலிக்கு பதிலாக Calling Name Presentation (CNAP) என்ற செயலியை மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு உருவாக்கிய இந்த செயலி விரைவில் இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் போலி அழைப்புகளில் இருந்து பொதுமக்கள் தப்ப முடியும்.
மேலும் sanchar sathi.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் கார்டில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கிறது. தற்போது அவற்றின் நிலை என்ன என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேவையில்லாத சிம் கார்டுகளை செயலிழக்க செய்ய வேண்டுமானால் அதற்கு அந்த இணையதளத்தை அணுக வேண்டும். அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில் ஒரே வாரத்தில் அந்த சிம்கார்டுகள் செயலிழக்க வைக்கப்படும். இதற்காக தனி செயலியையும் மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications