தடுப்பூசி போடாமல் மோசடி என்று சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தி.. மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமலே மோசடி செய்திருப்பதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் சிலர் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திக்கொள்ளாமலேயே, பொய்யாக தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக மோசடி நடப்பதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

விளக்கம்

விளக்கம்

இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை இதற்கு பதிலளித்துள்ளன. அதில், '' மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் முற்றிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி குறித்த தகவல்கள் சில சர்வதேச ஊடகங்களில் வெளியாகி இருப்பது முற்றிலும் தவறானது. எந்தவித அடிப்படையுமின்றி தவறான தகவல்களை பரப்பும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

 கோவின்

கோவின்

தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் கோவின் தளத்தில் பதிய வேண்டும். கோவின் தளத்தில் உள்ளததைத்தான் சுகாதாரப் பணியாளர்கள் செய்கிறார்கள். தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான நடைமுறைகளையோ அது கோவின் தளத்தில் பதியப்படும். இதை தெரியாமல் தான் செய்தியை எழுதி இருக்கிறார்கள். கோவின் டிஜிட்டல்தளம் வழங்கும் வலுவான தொழில்நுட்ப பின்புலத்தில் இது இயங்குகிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் அனைத்து கோவிட் தடுப்பூசிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 தகவல்கள்

தகவல்கள்

கோவின் நடைமுறை அனைத்தையும் உள்ளடக்கிய தளமாகும். இதில் நாடு முழுவதிலும் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் தகவல்கள் இருக்கும். அதோடு தடுப்பூசி குறித்து அனைத்து தகவல்களும் இதில் இருக்கும். தடுப்பூசி செலுத்தும்போது பதியப்படும் தகவல்கள் சரியானதாக இருக்கும் வகையில் இதில் சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

 முறைகேடு இல்லை

முறைகேடு இல்லை


கோவின் இணையதளத்தின் செயல்பாடு துல்லியமானது. அதனால் தடுப்பூசி முறைகேடு எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுவதாகவும், கோவின் தளத்தில் அவை பதிவாகின்றன'' என்று மத்திய அரசு ஊடகங்களின் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+