கண்டுபிடிக்கப்பட்ட பெயர்கள்.. சீனாவால் உண்மையை மாற்ற முடியாது! அருணாச்சல் சர்ச்சை - இந்தியா பதிலடி
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் மேலும் 11 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை அறிவித்து இருக்கும் நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை கொண்டு உண்மையை மாற்றிவிட முடியாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகளை அண்டை நாடான சீனா உரிமைகோரி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் மத்தியில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய எல்லையோரம் அமைந்து உள்ள அருணாச்சல பிரதேச பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, குடியிருப்புகள் மற்றும் சாலைகளை அமைத்தது. இதன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

11 பகுதிகள்
இதற்கு இந்திய அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், சீனா அத்துமீறலை நிறுத்தவில்லை. இந்த நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 11 பகுதிகளின் பெயர்களை திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என சீனா பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெயர்களுடன் வரைபடம்
அருணாச்சல பிரதேசத்தில் ஜி 20 மாநாடு தொடர்பாக குழுவில் இடம்பெற்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தை இந்திய அரசு அண்மையில் கூட்டியது. இதில் சீனா கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் அந்த கூட்டம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து சீனா இந்த வரைபடத்தை வெளியிட்டு இருந்தது.

சீன பெயர்கள்
5 மலை சிகரங்கள், 2 ஆறுகள், 2 நிலப்பரப்புகள், 2 குடியிருப்பு பகுதிகள் ஆகியவை சீனாவால் பெயரிடப்பட்ட இந்த 11 பகுதிகளுக்குள் அடங்கும். ஆனால், புவியியல் ரீதியாகவும் நிர்வாக அடிப்படையில் இந்த பகுதிகள் இந்திய அரசுக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசத்திற்குள் வருகிறது. ஆனால், இதற்கு உரிமை கோரும் வகையில் சீனா பெயர்களை அறிவித்து உள்ளது.

3 வது முறை
சீனா இவ்வாறு பெயர்களை வைப்பது முதல் முறையல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டில் திபெத் தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் வந்த சில நாட்களில் இதேபோல் சீனாவின் சிவில் விவகாரத்துறை அமைச்சகம் 6 இடங்களின் பெயர்களை அறிவித்தது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 இடங்களின் பெயர்களை அறிவித்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சீனா இந்த பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

3 மொழிகளில் வெளியீடு
சீன, பின்யின், திபெத் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த பெயர்கள் சீனாவின் சிவில் விவகாரத்துறை அமைச்சகத்தால் மாநில கவுன்சில் அளித்த புவியியல் பெயர்களுக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுவரை அருணாச்சல எல்லையோர பகுதிகளை ஆக்கிரமித்து கிராமங்களை கட்டிய சீனா தற்போது பெயர்களையும் வைக்கத் தொடங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

இந்திய அரசு விளக்கம்
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், "சீனாவின் தகவல்களை நாம் பார்த்து வருகிறோம். சீனா இவ்வாறு செய்வது முதல் முறை கிடையாது. நாங்கள் இதை நிராகரிக்கிறோம். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. இதனை பிரிக்க முடியாது. கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை கொண்டு இந்த உண்மையை மாற்ற முடியாது." என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications