உள்ளே புகுந்த இந்திய கடற்படை.. வணிக கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்.. அரபிக்கடலில் பகீர்
டெல்லி: அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ள நிலையில், அதைக் காப்பாற்ற இந்தியப் போர்க்கப்பல் விரைந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் வணிகம் என்பது பெரும்பாலும் கப்பல்களைச் சார்ந்தே இருக்கிறது. கப்பல் வணிகம் மட்டும் நிறுத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக வணிகம் ஸ்தம்பித்துவிடும் என்பதே வல்லுநர்கள் கருத்து.

கடந்த 2021இல் சூயஸ் கால்வாயில் கப்பல் ஒன்று சில நாட்கள் சிக்கியதற்கே அது சர்வதேச அளவிலான வணிக போக்குவரத்தைப் பாதித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து ரொம்பவே முக்கியமானதாகும்.
கடற்கொள்ளையர்கள்: அதேநேரம் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. சோமாலியா நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பலைத் தான் இப்போது நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உதவ நிலைமையை இந்தியப் போர்க்கப்பல் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
அரபிக்கடலில் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டின் கப்பலான எம்வி ருயன் என்ற கப்பல் ஆபத்தில் இருப்பதாக அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு இந்தியப் போர்க்கப்பல் பதிலளித்துள்ளது. இதையடுத்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அங்கே திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை: இது குறித்து இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "18 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் இன்று ஆபத்திற்கான எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியது. அந்த போர்க்கப்பலில் அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் ஏறியதாக எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியக் கடற்படை அதன் ரோந்து விமானத்தை அங்கே அனுப்பியுள்ளது. தற்போது அங்கே நிலவி வரும் சூழலை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியப் போர்க்கப்பல் ஒன்றும் அங்கே அனுப்பப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட அந்த கப்பலை இடைமறித்துள்ள போர்க்கப்பல், அங்கே நிலவி வரும் சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
எவி ருயன்: இந்த பிராந்தியத்தில் எதாவது பிரச்சினை என்றால் முதலில் பதில் அளிப்பது இந்தியக் கடற்படை தான் என்றும் இந்த பிராந்தியத்தில் வணிக கப்பல் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடற்படை உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எவி ருயன் என்ற அந்தக் கப்பல் சோமாலியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கப்பலின் கட்டுப்பாட்டை இந்தியக் கடற்படை ஊழியர்கள் இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கடற்கொள்ளையில் சோமாலியா கடற்கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு சோமாலியா கடற்கொள்ளையர்கள் மிகப் பெரிய கப்பலைக் கடத்துவது இதுவே முதல்முறை. 2017க்கு பிறகு சோமாலியா கடற்கொள்ளையர்கள் அட்டகாசத்தை ஒழிக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்தன. அதன் பின்னரே ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்த தாக்குதல்கள் நின்றிருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் இது ஆரம்பித்துள்ளது,
சோமாலியா: சோமாலியாவிற்கு அருகில் உள்ள அரபிக்கடலில் இந்த கடற்கொள்ளையர்கள் ஆக்டிவாக இருப்பதால் அந்தப் பக்கம் செல்லும் வணிக கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இங்கிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் எதாவது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் தான் ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான கப்பல் ஒன்றை ஹவுதி படை கடத்தியிருந்தனர். கப்பலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அந்த குழு ஜப்பான் கப்பலை நடத்தினர்.












Click it and Unblock the Notifications