ரயில்களில் லோயர் பெர்த்! பயணிகளுக்கு நிம்மதி கொடுக்கும் அறிவிப்பு! இனி இவங்களுக்கு பிரச்சினையே இல்லை
டெல்லி: ரயில்களில் முன்பதிவு செய்து ஸ்லீப்பர் வசதி கொண்ட கோச்களில் லோயர் பர்த் கிடைக்க வேண்டும் என வயதான பயணிகளும் கர்ப்பிணி பெண்களும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். இத்தகைய பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதமான நடவடிக்கையை ரயில்வே மேற்கோண்டுள்ளது. இதன்படி, இனி சீனியர் சிட்டிசன்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு தானாகவே லோயர் பெர்த் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
ரயில்வேயில் ஸ்லீப்பர் கோச்களில் செல்லும் பயணிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற படுக்கை கிடைப்பதுதான். ரயில்களில் பெரும்பாலும் வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அதிக அளவு பயணித்தாலும் இவர்களுக்கு பல நேரங்களில் லோயர் பெர்த்கள் கிடைப்பது இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஆட்டோமெட்டிக்காகவே லோயர் பெர்த் சீட்
பயணத்தின் போது லோயர் பெர்த்தில் இருப்பவர்களிடம் சீட்டை மாற்ற முடியுமா? எனக்கேட்டு சில வயதானவர்கள் மாறும் நிலை உள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கும் விதமாக வயதான பயணிகள், பெண்கள் உள்ளிட்டோர் தங்கள் பயணத்தின் போது லோயர் பெர்த் கிடைக்காவிட்டாலும் கூட அவர்களுக்கு ஆட்டோமெட்டிக்காகவே லோயர் பெர்த் கிடைக்க வகை செய்யும் மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
இதன்படி மூத்த பயணிகள் (60 வயதிற்கு மேற்பட்ட பயணிகள், 58 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள்), கர்ப்பிணி பெண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் ஆகியோருக்கு தானாகவே லோயர் பெர்த் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீட்கள் இருப்பது மாறுபடும் எனவும் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இதுதொடர்பான தகவல் வெளியான நிலையில் தற்போது மத்திய அரசு செய்தி தொடர்பு அமைப்பான பிஐபி வெளியிட்டுள்ளது.
ஒரு பெட்டிக்கு எத்தனை சீட்கள்?
இதன்படி, லோயர் பெர்த்திற்கான ரிசர்வேஷன் ஒவ்வொரு பெட்டிக்கும் எவ்வளவு உள்ளது என்பது வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:-
* ஸ்லீப்பர் கிளாஸ் - ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 படுக்கைகள்
* ஏசி 3 அடுக்கு (3AC) - ஒரு பெட்டிக்கு 4 முதல் 5 லோயர் படுக்கைகள்
* ஏசி 2 அடுக்கு - ஒரு பெட்டிக்கு 3 முதல் 4 லோயர் படுக்கைகள்
* 2 சிட்டிங் ஏசி சேர் கார் - 4 சீட்கள்
பயணத்தின் போது லோயர் பெர்த் படுக்கைகள் காலியாக இருந்தால், வயதான மற்றும் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் முன்பதிவு நடைமுறை முடிந்ததும், லோயர் பெர்த் தேவைப்படும் பயணிகளுக்கு இந்த படுக்கைகள் கிடைப்பதை இது உறுதி செய்கிறது.
அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
முன்னதாக அண்மையில், நாடாளுமன்ற லோக்சபாவில் கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அவர் கூறுகையில், "ரயில்வே முன்பதிவு முறை இப்போது மூத்த குடிமக்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள், கர்ப்பிணிகள், தகுதியான பயணிகளுக்கு லோயர் படுக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
அத்துடன், கீழ் படுக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் சிறப்பு வசதியையும் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விதிகளின்படி இனிமேல் ரயில்வேயில் லோயர் பெர்த்கள் காலியாக இருந்தால் அவை மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications