மாற்றம் காணும் விமான போக்குவரத்து.. ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே போட்ட சூப்பர் ஒப்பந்தம்
டெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.
உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இவ்வளவு பெரிய பணியை மேற்கொள்ளும் ரயில்வே நிர்வாகம் தினம் தினம் தன்னை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில்தான் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை ரயில்வே துறை அறிவித்திருந்து. இதற்கு அமிர்த் பாரத் நிலையம் திட்டம் என்றும் பெயரிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.24,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல மறுபுறம் இந்திய விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.
தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் (கதி சக்தி) துணைவேந்தர் பேராசிரியர் மனோஜ் சவுத்ரி மற்றும் ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ரெமி மைலார்ட் ஆகியோர் இணைந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், "இந்த பல்கலைக்கழகம், தீவிர தொழில்-கல்வி கூட்டாண்மைகளில் கவனம் செலுத்தும்.
அதன் அனைத்து படிப்புகளும் தொழில்துறையுடன் இணைந்து வடிவமைக்கப்பட இருக்கிறது. இதில் படிக்கும் மாணவர்கள் தொழில்துறைக்கு தயாராக இருப்பார்கள். போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் வேலைவாய்ப்பிற்காக அவர்கள் விண்ணப்பிக்கும் போது வேலை வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிடும். ஏர்பஸ் உடனான இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த இலக்கை அடைவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்று கூறியுள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 15,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். எர்பஸ் நிறுவனம் உலகின் சிறந்த விமான போக்குவரத்து நிறுவுனமாகும். சர்வதேச அளவில் இரண்டு பெரும் விமான நிலையங்களில் இதுதான். ஒன்று போயிங், மற்றொன்று ஏர்பஸ். இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த நிறுவனத்துடன் ஏற்கெனவே இந்தியா ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
அதாவது, ஏர்பஸ் மற்றும் டாடா சமீபத்தில் இந்திய விமானப்படைக்கான C295 விமானத்தை இந்தியாவில் வடிவமைக்கவும், புதுமைப்படுத்தவும், தயாரிக்கவும், மற்றும் மேம்படுத்தவும் கூட்டாக இணைந்து செயல்படுவதாக ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications