பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த துருக்கி, அஜர்பைஜான்! முதுகெலும்பை உடைத்த இந்தியர்கள்! மாலத்தீவு தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் மோதலில் பாக். ஆதரவு நிலைப்பாட்டை துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் எடுத்தன. தவறு பாக். மேல் இருக்கும் போதிலும் இந்த இரு நாடுகளும் அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது பெரிய சர்ச்சையானது. இதற்கிடையே இந்த இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன. அது இரு நாடுகளுக்கும் மிகப் பெரிய பொருளாதார அடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாமல் இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்த இந்தியா திரும்பியும் அடித்தது. இதில் பாகிஸ்தான் திணறிப்போனது.

India Pakistan Turkey tour

இந்தியா பாகிஸ்தான்

இதனால் வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அதை இந்தியா ஏற்ற நிலையில், மோதல் முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்தைப் பார்க்கும் அனைவருக்குமே இதில் பாகிஸ்தான் மீது தவறு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.. இருப்பினும், சர்வதேச விவகாரம் என்பதால் பெரும்பாலான நாடுகள் மவுனம் காக்கவே செய்தது. பஹல்காம் தாக்குதலுக்கு உலகின் அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் மோதலில் மவுனம் காக்கவே செய்தது.

அஜர்பைஜான், துருக்கி

இருப்பினும், அஜர்பைஜான் நாடு பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. பாகிஸ்தான் மக்களுடன் நிற்பதாக அஜர்பைஜானின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டது. அஜர்பைஜான் மட்டுமின்றி துருக்கியும் கூட இதே நிலைப்பாட்டை எடுத்தது. இந்த விவகாரத்தில் தவறு யார் மீது என தெரிந்ததாலேயே மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் அமைதியாக இருந்தன. ஆனால், அஜர்பைஜான் மற்றும் துருக்கி தேவையே இல்லாமல் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் இந்த இரு நாடுகளுக்கும் எதிராக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள். மேலும், Boycott Azerbaijan, Boycott Turkey உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளையும் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் மக்கள் செல்லக்கூடாது.. அதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது.

India Pakistan Turkey tour

துருக்கி சுற்றுலா

இதில் துருக்கியைப் பொறுத்தவரை ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், ஈரான் நாடுகளில் இருந்து தான் அதிகச் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். துருக்கிக்கு வரும் வெளிநாட்டினரில் டாப் 10 நாடுகளில் இந்தியா இருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 3.3 லட்சம் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் துருக்கி சென்றுள்ளனர். இது கடந்த 2023ம் ஆண்டில் துருக்கி சென்ற 2.74 லட்சம் சுற்றுலாப் பயணிகளை விட விட 20.7% அதிகமாகும்.

India Pakistan Turkey tour

அஜர்பைஜான் சுற்றுலா

அடுத்த அஜர்பைஜான்.. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான அஜர்பைஜான், இப்போது ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு நடுவில் அமைந்துள்ளது. காஸ்பியன் கடல் மற்றும் காகசஸ் மலை என இயற்கை அழகு அதிகம் உள்ள நாடாகும். இங்குக் கடந்த 2023ம் ஆண்டு 1.17 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்ற நிலையில், கடந்தாண்டு அது 108 சதவிகிதம் உயர்ந்து 2.43 லட்சமாக அதிகரித்தது. அஜர்பைஜானுக்கு வரும் டாப் 5 வெளிநாட்டினரில் இந்தியர்களும் உள்ளனர்.

India Pakistan Turkey tour Featured

அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இரு நாடுகளுக்கும் சுற்றுலாப் பயணிகளில் கணிசமானோர் இந்தியாவில் இருந்தே வருகிறார்கள். இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே துருக்கி மற்றும் அஜர்பைஜான் என இரு நாடுகளுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் தான் இரு நாடுகளும் பாக். ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், புறக்கணிப்பு வாய்ஸ் அதிகரித்துள்ளது. மேலும், பல சுற்றுலா நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்குமான சுற்றுலா திட்டங்களையும் நிறுத்த தொடங்கியுள்ளன.

மாலத்தீவு நினைவிருக்கா?

நெட்டிசன்கள் சொன்னால் என்ன ஆகிவிடும் என நீங்கள் கேட்கலாம். கடந்தாண்டு இப்படித் தான் இந்தியா குறித்தும் நமது பிரதமர் குறித்தும் மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்துகளைக் கூறினார். இது பெரிய சர்ச்சையாக வெடிக்கவே. மாலத்தீவை புறக்கணிக்கும் குரல்கள் அதிகரித்தன.

இதனால் இந்தியாவில் இருந்து மாலத்தீவு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இது மாலத்தீவு பொருளாதாரத்தையே ஆட்டிவிட்டது. இதன் காரணமாகவே சில மாதங்களில் மாலத்தீவு அதிபர் முய்ஸு பல்டி அடித்தார். இந்தியர்கள் தயவு செய்து மாலத்தீவு வாங்க என்று கெஞ்சும் அளவுக்குப் போனது. இப்போது துருக்கி, அஜர்பைஜானுக்கும் அதே குரல்கள் எழுந்துள்ளன. இந்தியச் சுற்றுலாப் பயணிகள் புறக்கணித்தால் அதன் பொருளாதாரப் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

https tamil oneindia com television mayilsamy-son-anbu-says-that-his-father-helped-for-the-woman-who-cooked-rasam-for-him-703253 html

இந்தியா பாகிஸ்தான் மோதல்

இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தைப் பொறுத்தவரை கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்தாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அத்துமீறி அடிவாங்கிய பாகிஸ்தான்

ஆனால், இந்திய ராணுவத்தின் இந்த வெற்றியை பாகிஸ்தானால் ஏற்க முடியவில்லை. இதனால் ஆத்திரத்தில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. முதல் இரு நாடுகள் பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இருப்பினும், திருப்பித் தாக்கவில்லை. ஆனால், 3வது நாள் இந்தியா திருப்பித் தாக்க முயன்றது. இதில் பாகிஸ்தானில் மிக மோசமான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஓடி வந்தது குறிப்பிடத்தக்கது,

இருப்பினும், இந்தியா சண்டை நிறுத்தம் செய்ய மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், எந்த விதமான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிந்து நதி நீரை இந்தியா தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியா கடந்த 65 ஆண்டுகளில் முதல்முறையாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+