அசத்திய 'ஆபரேஷன் அஜய்'.. இஸ்ரேலில் சிக்கி இருந்த இந்தியர்கள் மீட்பு.. மோடி மேஜிக்.. பயணிகள் குஷி
டெல்லி: 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் சிக்கி இருந்த இந்தியர்கள் முதல் கட்டமாக மீட்கப்பட்டு உள்ளனர். அங்கு நடந்து வரும் போரினால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் 212 பேர் முதல் கட்டமாக மீட்கப்பட்டு உள்ளனர். 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ் முதல் விமானம் இன்று டெல்லியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சத்தில் உள்ளது. அங்கே அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கிய நாளில் ஏர் இந்தியா தனது விமான சேவையை உடனடியாக நிறுத்தியதால், அங்கே தங்கி இருந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியவில்லை.

அவ்வாறு நாடு திரும்ப முடியாதவர்கள் திரும்புவதற்கு வசதியாக இந்த ஆபரேஷன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்ட பயணிகள் இன்று அதிகாலை டெல்லி வந்தனர். மீட்கப்பட்டவர்களை வரவேற்க மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அங்கே நர்சிங், பல்வேறு தொழில்நுட்ப பணிகள், மருத்துவ பணிகள், படிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக இந்தியர்கள் சென்றுள்ளனர். இவர்கள் தற்போது போருக்கு இடையில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கவே தற்போது இந்தியா ஆபரேஷன் அஜய்யை தொடங்கி உள்ளது. இஸ்ரேல் போர் தற்போது உச்சத்தில் உள்ளது.
அங்கே நர்சிங், பல்வேறு தொழில்நுட்ப பணிகள், மருத்துவ பணிகள், படிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷ்யங்களுக்காக இந்தியர்கள் சென்றுள்ளனர். இவர்கள் தற்போது போருக்கு இடையில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கவே தற்போது இந்தியா ஆபரேஷன் அஜய்யை தொடங்கி உள்ளது. இஸ்ரேல் போர் தற்போது உச்சத்தில் உள்ளது,
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. போரின் ஆறாவது நாளில், இஸ்ரேலில் 222 வீரர்கள் உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறி உள்ளது. இந்த போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும், இஸ்ரேல் - பாலஸ்தீன வரலாற்றில் இந்த காசா போர் மிகப்பெரிய போராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் பின்னணி: பாலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. 1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் இருந்து பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில், இஸ்ரேல் அதிகாரத்தை எதிர்க்கும் தனி பகுதிதான் காசா. இதில் இருந்து இஸ்ரேல் முன்பே வெளியேறிவிட்டது. காரணம் இங்கே உள்ள ஹமாஸ் அமைப்பு. இந்த ஹமாஸ் அமைப்பும் - இஸ்ரேலும்தான் தற்போது பாலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன.
இந்த இரண்டு நாடுகளை சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications