பொருளாதார வளர்ச்சி.. சீனா பம்முது.. இந்தியா பாய்கிறது.. சொல்வது S&P ரேட்டிங்
டெல்லி: சீனாவின் பொருளாதாரம் என்பது தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் என்பது வலுவாக உள்ளதாகவும், வரும் நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் என்பது இன்னும் வளரும் எனவும் அமெரிக்காவின் S&P ரேட்டிங் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது சரிய தொடங்கி உள்ளது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கிய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றனர்.

இருப்பினும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கிய நிலையில் இந்தியா தொடர்ந்து பிரச்சனையின்றி இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் எஸ் & பி (S&P) குளோபல் ரேட்டிங்ஸ் இந்திய பொருளாதாரம் குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது. எஸ் & பி என்பது ஒரு அமெரிக்கக் கடன் மதிப்பீட்டு நிறுவனமாகும். இது பங்குகள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றின் மீதான நிதி தொடர்பான ஆய்வை மேற்கொண்டு ரேட்டிங் வழங்கி முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் அண்டை நாடான சீனாவின் பொருளாதாரம் தற்போது சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவின் இந்தியாவின் பொருளாதாரம் என்பது சிறப்பான நிலையில் இருப்பதாக எஸ் & பி ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. துதொடர்பாக எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் ஆசிய பசிபிக் கிரெடிட் அவுட்லுக் 2024-ல் 'Slowing Dragons, Roaring Tigers’ என்ற தலைப்பில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் பொருளாதாரம் என்பது வலுவான வளர்ச்சியை கொண்டுள்ளது. படிப்படியாக முதலீடுகளை அதிகரித்தல், அதிகப்படியான மக்கள்தொகை, உற்பத்தி திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் என்பது வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது இந்திய பொருளாதாரம் என்பது 6 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. தற்போதைய இந்த வேகம் தொடரும் பட்சத்தில் 2024 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியாக 6 சதவீதத்தை தொடர்ந்து தக்க வைக்கலாம். அதேவேளையில், 2025, 2026 நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 6.9 சதவீதமாக அதிகரிக்கலாம்.
இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் என்பது பிரகாசமான நிலையில் இருக்கிறது. ஆனாலும் கடன் தொகையை கையாளுதல், மார்க்கெட் நிலவரம் மற்றும், வருவாய் ஆதாரங்களை உருவாக்குதல் உள்ளிட்டவை என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனை சிறப்பாக கையாள்வது அவசியமாகும். இதுதவிர காலநிலை மாற்றம், தேவையான தொழிலாளர்கள் கிடைக்க செய்தல், பொருளாதார உருவாக்கலுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்டவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிப்படியான முதலீடுகளை அதிகரிப்பது என்பது பெரிய அளவில் நன்மையாக மாறும். ஏனென்றால் இங்குள்ள அதிகப்படியான மக்கள்தொகை, மேம்பட்ட உற்பத்தி திறன் என்பது நிச்சயம் கைக்கொடுக்கும். அதோடு சேவை சார்ந்த தொழில்கள் இந்தியாவில் வலுவான வளர்ச்சியை கொண்டுள்ளன. இது வரும் நாட்களில் இந்திய பொருளாதாரத்தில் பெரிய பங்களிப்பை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications