நாட்டிலேயே முதன்முறையாக "அப்ளாஸ்" வாங்கிய ஐஸ்வர்யா மேனன்.. மோடியின் விழாவுக்கு போறாரே? யார் தெரியுதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை 3வது முறையாக மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவுக்கு ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. யாரிந்த ஐஸ்வர்யா மேனன்?

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க போகிறார்.
டெல்லியில் நாளை பதவியேற்பு விழா நடக்கிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மாலை 7.15 மணிக்கு இந்த பதவியேற்பு விழா நடக்கிறது.. 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

Narendra Modi Vande Bharat express

பதவியேற்பு விழா: இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... அதேபோல, மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள் என விவிஐபிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது..

இதில் சென்னை கோட்டத்தை சேர்ந்த பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுமே, ஐஸ்வர்யா மேனன் மீது ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் குவிந்து வருகிறது.. யாரிந்த ஐஸ்வர்யா மேனன் என்ற ஆர்வமும் எகிறிவருகிறது.

ஐஸ்வர்யா மேனன்: வந்தே பாரத் ரயில்களில் பணிபுரிந்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.. சென்னை - விஜயவாடா மற்றும் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மட்டுமல்லாமல், ஜன் சதாப்தி போன்ற பல்வேறு ரயில்களை இயக்கியிருக்கிறார்..

இவர் கடினமான உழைப்பாளி.. பணியில் அர்ப்பணிப்பும், ஓயாத ஆர்வமும் நிறைந்தவர்.. இதனால், தெற்கு ரயில்வேயின் துறைரீதியான பாராட்டுக்களை அதிகமாக பெற்றிருக்கிறார்.. ரயில்வே சிக்னலிங் குறித்தும் ஆழமான அறிவும் இருப்பதால்தான், இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான நேரங்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

பிரதமர் மோடி: அதனால்தான், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு செல்வதற்கு பிரத்யேகமான அழைப்பு, தெற்கு ரயில்வே மூலம் வழங்கப்பட்டுள்ளது இதனால். சென்னை ரயில்வே கோட்டமும் பெருமை கொள்கிறது.

அதேபோல, பல்வேறு ரயில்வே கோட்டங்களில் பணியாற்றும் 10 ரயில் ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... இதில், மிக முக்கியமானவர் சுரேகா யாதவ் ஆவார்.. இவர் மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சதாரா பகுதியை சேர்ந்தவர்... இதில் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988ஆம் ஆண்டு முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை தக்க வைத்து வருபவரும்கூட. அதுமட்டுமல்லாமல், வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பெண் லோகோ பைலட்டும்கூட...

வந்தே பாரத்: தற்போது, மத்திய ரயில்வே மண்டலத்தில் பணியாற்றி வருகிறார்.. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் - சோலாபூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் சுரேகா தற்போது இயக்கி வருகிறார்.. தேசிய அளவில் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளதால், இவருக்கும் அழைப்பிதழ் வந்திருக்கிறது.

இவர்களை தவிர, தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள் மற்றும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களும் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாளை கலந்துகொள்ள உள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+