800 கிமீ வேகத்திலும் மாறாத துல்லியம்! உலக நாடுகளை அசரடித்த இந்தியா! பாதுகாப்பு துறையில் புது மைல்கல்
டெல்லி: பாதுகாப்புத் துறையில் இந்தியா தொடர்ச்சியாகப் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாகப் பல அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அப்படியொரு மிக முக்கியமான சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இது இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரும் தீவிரவாத எதிர்ப்புகளைச் சமாளிக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து வருகிறது.

மாபெரும் சாதனை
பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்களை வாங்குவது ஒரு பக்கம் என்றால்.. உள்நாட்டிலேயே தேவையான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் இந்தியா உருவாக்கி வருகிறது. அப்படித் தான் இந்தியா ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒரு முக்கியமான சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
அதிவேகமாகப் போர் விமானங்கள் செல்லும்போது அதில் இருந்து தப்பிக்கும் ராக்கெட்-ஸ்லெட் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. போர் விமானங்களை இயக்கும்போது எதிர்பாராத நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கும் நிலையில், அதை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முழுமையாகத் தடுக்கலாம். இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம்
உள்நாட்டிலேயே இந்த மேம்பட்ட தப்பிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. சில முன்னணி நாடுகளைத் தவிர்த்து, பல நாடுகளில் கூட இதுபோன்ற ஒரு அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் இல்லை. ஆனாலும் இந்தியா இந்தப் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ராக்கெட்-ஸ்லெட் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இந்த ராக்கெட்-ஸ்லெட் சோதனையில் ராக்கெட் உந்துவிசை கொண்ட ஒரு அமைப்பை விமானம் போன்ற சிஸ்டத்தில் இணைப்பார்கள். அது மின்னல் வேகத்தில் தண்டவாளத்தில் செலுத்தப்படும். இது கிட்டத்தட்ட நடுவானில் விமானம் செல்லும் வேகத்திற்கு இணையாகச் செல்லும். அப்போது பாதுகாப்பு அமைப்பைச் சோதித்து செக் செய்வார்கள். இதைத் தான் ராக்கெட்-ஸ்லெட் சோதனை என்கிறார்கள். இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
Defence Research and Development Organization (DRDO) has successfully conducted a high-speed rocket-sled test of fighter aircraft escape system at precisely controlled velocity of 800 km/h- validating canopy severance, ejection sequencing and complete aircrew-recovery at Rail… pic.twitter.com/G19PJOV6yD
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) December 2, 2025
800 கிமீ
டிஆர்டிஓ நடத்திய இந்தச் சோதனையில் மணிக்கு 800 கி.மீ வேகத்தில் அந்த சிஸ்டம் இயக்கப்பட்டது. அந்த வேகத்திலும் உள்ளே இருந்த வீரரால் பாதுகாப்பாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேற முடிந்தது. இதன் மூலம் வீரர் பாதுகாப்பாக மீட்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் ட்ராக் ராக்கெட் ஸ்லெட் மையத்தில் தான் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ராஜ்நாத் சிங்
இதற்காக டிஆர்டிஓ, இந்திய விமானப்படை, ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகிய அமைப்புகளைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். அவர் மேலும், "இந்தியா தனது உள்நாட்டுப் பாதுகாப்பு திறனை மேம்படுத்தி, தற்சார்பு நிலையை எட்டுவதற்கான ஒரு முக்கிய மைல்கல் இது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தவுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் போர் விமான விபத்துகளில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாது என்ற நிலை எட்டப்படும்!
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்திய ராணுவத்துக்கு அதானி கொடுத்த கிப்ட்.. 2,000 பிரஹர் இலகுரக இயந்திர துப்பாக்கிகள் டெலிவரி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு











Click it and Unblock the Notifications