வெள்ளை மாளிகைக்கு டெல்லியில் இருந்து பறந்த போன்.. டிரம்புக்கு பிரதமர் மோடியின் முதல் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி இன்று தொலைப்பேசியில் பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இப்போது அழைத்து பேசிருக்கிறார்.


அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டார். இதில் டொனால்டு டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வானார்.

narendra modi donald trump us

இதையடுத்து அதிகார மாற்றத்துக்கான ஏற்பாடுகள் இந்த மாதம் தான் நடந்தது. அமெரிக்க அரசியல் அமைப்பின்படி ஒவ்வொரு அதிபரின் பதவி காலமும் ஜனவரி 20-ந் தேதிதான் தொடங்கும். அந்த வகையில் டிரம்ப் பதவி ஏற்பு விழா வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் எனப்படும் அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பதவி ஏற்பு விழா நடந்தது. அமெரிக்க அரசியல் சாசனப்படி, அமெரிக்காவின் 47-வது அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்றார். அவர் தனது குடும்ப பைபிளையும், 1861-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளையும் வாசித்து பதவி ஏற்றுக்கொண்டார்.

அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி டிரம்ப் நாட்டு மக்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அதிரடியாக அறிவித்தார். சட்டவிரோதமாக குடியேறுவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய பல லட்சக் கணக்கானவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கும் என்றும் அறிவித்தார். இதேபோல் பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியது ஒரு முட்டாள்தனமான பரிசு" என்று அறிவித்த டிரம்ப், "பனாமா கால்வாயை சீனா இயக்குகிறது" என்றும், அதை நிச்சயம் திரும்பப் பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா தனது எல்லையை விரிவுபடுத்தும் என்றும் செவ்வாய் கிரகத்தில் கொடியை நாட்டும் என்றும் கூறினார். மற்ற நாடுகளுக்கு வரி மற்றும் கட்டணங்கள் விதித்து நமது மக்களை பணக்காரர்களாக மாற்றுவோம் என்றும் டிரம்ப் உரையில் கூறினார். மேலும் வளைகுடா போர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து டிரம்ப் அப்போது பேசினார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். முகேஷ் அம்பானி தொழில் அதிபர் மற்றும் பதவியேற்புக்கு நன்கொடை அளித்தவர் என்ற முறையில் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவியேற்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை..

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி இன்று தொலைப்பேசியில் பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையில் பொறுப்பேற்ற பின்னர் (அமெரிக்க அதிபர் மாளிகை), பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இப்போது அழைத்து பேசியுள்ளார். முன்னதாக டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே நவம்பர் 6 ஆம் தேதி போனில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+