குறி வச்சா இரை விழனும்..பாக்.,ஐ பதம் பார்த்த இந்தியா! குருவி போல விழுந்த ட்ரோன்கள்..வீடியோவை பாருங்க
டெல்லி: பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது. நேற்று இரவு பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான புதிய வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் அடிக்கடி பாதுகாப்பு படையினர் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 முக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில், லஸ்கர் இ தொய்ஃபா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத தலைமையகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் கூண்டோடு அழிக்கப்பட்டது. இதில் இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறியிருந்தது. மேலும் தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் பொது மக்களுக்கு யாருக்கும் பாதிப்பு இல்லை என இந்தியா கூறியிருந்தது.
அதே நேரத்தில் இந்தியாவின் தாக்குதல் போர் என குற்றம் சாட்டிய பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியிருந்தது. சீனாவை நம்பி அதன் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்த்து இருந்த நிலையில் சீன ஏவுகணைகள் இந்திய எல்லைக்குள் நுழையும் முன்னரே சுட்டு வீழ்த்தப்பட்டன. மேலும் இந்தியாவின் ட்ரோன்கள், லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சீனாவின் பாதுகாப்பு அமைப்புகளை அடித்து நொறுக்கின.
இதற்கிடையே நேற்று இரவு 8 மணி முதல் ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதிகளிலும் பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன் தாக்குதல் நடத்தியது. 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவுகணைகள் இந்திய எல்லையை நோக்கி படையெடுத்த நிலையில் ரஷ்யாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு அதனை கண்டறிந்து சிக்னல் கொடுத்தது. உடனடியாக இந்தியா நோக்கி வந்த ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மேலும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீரங்கி தாக்குதலிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஈடுபட்ட நிலையில் அதற்கும் விடிய விடிய இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
ஒருபுறம் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்துக் கொண்டு பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத், சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி இந்திய ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டன.
தீபாவளி பட்டாசுகள் போல அணிவகுத்து வந்த பாகிஸ்தானின் தூண்கள் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளால் தூள் தூளாக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டதாகவும், ட்ரோன்கள் தாக்கி அளிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில்," 08 மற்றும் 09 மே 2025 அன்று இரவு முழுவதும் மேற்கு எல்லையில் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஆயுதப் படைகள் பல தாக்குதல்களைத் தொடங்கின. ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாக். துருப்புக்கள் ஏராளமான போர்நிறுத்த மீறல்களையும் (CFVs) செய்தது.
OPERATION SINDOOR
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 9, 2025
Pakistan Armed Forces launched multiple attacks using drones and other munitions along entire Western Border on the intervening night of 08 and 09 May 2025. Pak troops also resorted to numerous cease fire violations (CFVs) along the Line of Control in Jammu and… pic.twitter.com/WTdg1ahIZp
ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன மற்றும் போர் நிறுத்த மீறல்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட்டது. இந்திய ராணுவம் தேசத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அனைத்து மோசமான வடிவமைப்புகளும் பலத்துடன் பதிலளிக்கப்படும்." என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய எல்லைக்குள் ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைவதும் அதனை ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோவும் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications