டிரம்ப் சொல்றதை கேட்க முடியாது.. சீனாவுக்கு நிகராக ரஷ்யாவிடம் ஆயில் வாங்கும் இந்தியா.. முழு டேட்டா
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா தொடர்ந்து கதறி வருகிறது. ஆனால் இந்தியா கண்டுக்கொள்ளவில்லை. இதற்கிடையே தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்துள்ளதாகவும், சீனாவுக்கு நிகராக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதாகவும் முக்கிய டேட்டா வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்றார். ஆனால் அது இன்று வரை சாத்தியமாகவில்லை. இதற்கிடையே தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை இந்தியா தூண்டுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 50 சதவீத வரியை விதித்துள்ளார்.

இதனால் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் இருந்து நம்மை விட சீனா தான் அதிக கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால் சீனாவை விட்டுவிட்டு நம் நாட்டை டிரம்ப் குறிவைத்து ஒரு தலைபட்சமாக வரிகளை விதித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு நம் மீது இருக்கும் வன்மத்தை தான் காட்டுகிறது.
அதுமட்டுமின்றி நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதன்பிறகு தான் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்படும் என்ற திமிராக பேசி வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது வர்த்தக ஆலோசகர் நவ்ரோ, வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் உள்ளிட்டவர்கள் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால் நம் நாடு கண்டுக்கொள்ளாமல் உள்ளது.
நம் நாட்டின் நலன் கருதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது. அதோடு தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நம் நாடு வாங்கி வருகிறது. வரி விதிப்புக்கு இந்தியா அஞ்சி ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யாது என்று நினைத்த அமெரிக்காவுக்கு தற்போது அதிர்ச்சியாகி உள்ளது. ஏனென்றால் டிரம்ப் வரி விதிப்புக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு அதிகரித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து ஜூலை மாதம் 2.7 பில்லியன் யூரோவுக்கு கச்சா எண்ணெய் வாங்கியது. இது இந்திய மதிப்பில் சுமார் 27,945 கோடியாகும். இந்த கச்சா எண்ணெய் கொள்முதல் ஆகஸ்ட் மாதம் அதிகரித்தது. ஆகஸ்ட் மாதம் நம் நாடு ரஷ்யாவிடம் 2.9 பில்லியன் யூரோவுக்கு கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.30,015 கோடியாகும். இந்த விவரத்தை பின்லாந்து தலைநகர் ஹெலிசின்கிங்கை (Helsinki) தலைமையிடமாக கொண்ட Centre for Research on Energy and Clean Air நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து சீனா கடந்த ஜூலை மாதம் 42,435 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கியது. அதன்பிறகு அதனை குறைத்து கொண்டது. ஆகஸ்ட்டில் ரஷ்யாவிடம் இருந்து சீனா 3.1 பில்லியன் யூரோ டாலர்(இந்திய மதிப்பில் ரூ.32,085 கோடி) அளவுக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நிலையில் நம் நாடு அதற்கு நிகராக முன்னேறி செல்கிறது. இது டிரம்பின் பூச்சாண்டிக்கு இந்தியா அச்சமடையவில்லை என்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications