நடுவானில் திடீர் பரபரப்பு.. திடீரென வேர்த்து கொட்டிய பயணிகள்.. உள்ளே காங்கிரஸ் முக்கிய பிரமுகர்!
டெல்லி: இண்டிகோ விமானத்தில் நடுவானில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் டாப் விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியாவின் விமான துறை என்பது மிக வேகமாக வளரும் ஒரு துறையாக இருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

நமது நாட்டில் மிட்டில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் பல மடங்கு அதிகரிக்கவே செய்யும்..
இண்டிகோ: இப்போது இண்டிகோ நிறுவனம் தான் இந்தியா வானை ஆக்கிரமித்து வருகிறது. இப்போது சுமார் 50% மேல் விமான துறையை இண்டிகோ வசம் தான் இருக்கிறது. இண்டிகோ மேலும் மேலும் தனது வளர்ச்சியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது இண்டிகோ நிறுவனத்திற்குப் போட்டி தர டாடாவின் ஏர் இந்தியா இறங்கியுள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 500 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
இருப்பினும், இண்டிகோ நிறுவனத்தில் நடக்கும் சில மோசமான சம்பவங்கள் அந்த நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் தெரிவிப்பது போலவே இருக்கிறது. இண்டிகோ ஊழியர்கள் பயணிகளிடம் மோசமாக நடந்து கொள்வது குறித்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இண்டிகோ இப்போது மீண்டும் செய்தியில் சிக்கியுள்ளது. இதுவும் அந்த நிறுவனத்திற்குக் கெட்ட பெயரையே பெற்றுத் தந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ விமானம் 6E7261 இயக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் தான் பயணிகள் பயங்கரமான அனுபவம் ஒன்றைச் சந்தித்துள்ளனர். அதாவது நடுவானில் விமானத்தின் ஏசி திடீரென வேலை செய்யாமல் போயுள்ளது. இதனால் அங்குள்ள பயணிகள் அனைவருக்கும் கொஞ்ச நேரத்திலேயே வேர்த்து கொட்டத் தொடங்கியுள்ளது. அந்த ஒட்டுமொத்த 90 நிமிடங்களுக்கும் மிக மோசமானதாக இருந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் முக்கிய தலைவர்: இந்த விமானத்தில் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா என்பவரும் பயணித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "விமான நிலையத்திலேயே முதலில் சுமார் 10-15 நிமிடங்கள் ஏசி இல்லாமல் இருந்தோம். அதன் பின்னரும் ஏசி இல்லாமலேயே விமானம் புறப்பட்டுச் சென்றது.
டேக்-ஆஃப் முதல் தரையிறங்கும் வரை, ஏசிகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பயணிகள் பலரும் இது குறித்து புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கே இருந்த ஏர் ஹோஸ்டஸ் பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பர்களை மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
பெரிய பிரச்சினை: மேலும், இது குறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் பயணிகள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை கொண்டு வியர்வையைத் துடைத்துக் கொண்டும் விசிறிக் கொண்டும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த அவர், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றை டேக் செய்து சம்மந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
24 மணி நேரத்திற்குள் இண்டிகோ விமானத்தில் ஏற்படும் மூன்றாவது சிக்கல் இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லிக்குக் கிளம்பிய விமானம் பாட்னாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் பாட்னாவில் தரையிறங்கியது. அதேபோல ராஞ்சிக்குப் புறப்பட்ட விமானமும் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது. இதுபோல அடுத்தடுத்து இண்டிகோ விமானத்தில் நடக்கும் சம்பவங்கள் அவர்களுக்கு நல்லதாக இருப்பதில்லை.
Had one of the most horrifying experiences while traveling from Chandigarh to Jaipur today in Aircraft 6E7261 by @IndiGo6E. We were made to wait for about 10-15 minutes in the queue in the scorching sun and when we entered the Plane, to our shock, the ACs weren't working and the… pic.twitter.com/ElNI5F9uyt
— Amarinder Singh Raja Warring (@RajaBrar_INC) August 5, 2023
-
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications