நூலிழையில் தப்பிய டெல்லி டூ பாட்னா விமானம்.. பைலட்டின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
டெல்லி: டெல்லியில் இருந்து பீகாருக்கு 173 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியுள்ளது. தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு முன்பே விமானம் கீழே இறங்கியது. கடைசி நேரத்தில் இதை கவனித்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை டேக் ஆஃப் செய்தார். இதனால் மீண்டும் வானில் வட்டமடித்த விமானம் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து வந்த தகவலை அடுத்து பத்திரமாக தரையிறங்கியது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கியது. விமானத்தின் என்ஜினுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் ஸ்விட்ச் தடை பட்டதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது.

நூலிழையில் தப்பிய விமானம்
விமான விபத்துக்கு பிறகு அனைத்து விமானங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீப காலமாக விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்படுவது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில்தான் பாட்னா விமான நிலையத்தில் நேற்று அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடைபெற்றது. விமானியின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
டக்கென சுதாரித்த விமானிகள்
டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவிற்கு நேற்று இரவு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான (6E 2482) விமானம் வருகை தந்தது. விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தளத்துக்கு முன்னரே விமானத்தை விமானிகள் தரையிறக்கினர். விமானத்தை நிறுத்துவதற்கான போதிய இடம் இந்த இடத்தில் இருக்காது என்பதை உணர்ந்த விமானிகள், சட்டென சுதாரித்து விமானத்தை டேக் ஆஃப் செய்தனர்.
மீண்டும் வானில் பறந்தது
விமானம் மீண்டும் வானில் பறந்து வானில் வட்டமடித்தது. உரிய நேரத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி கிடைத்தததால் விமானம் இரவு 9 மணியளவில் லேண்டிங் ஆனது. விமானத்தில் பயணம் செய்த 173 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கினர். விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறுகிய ஓடுபாதை
பாட்னாவில் உள்ள விமான நிலையம் மிகவும் குறுகிய ரன்வேயை கொண்டது ஆகும். எனவே இந்த விமான நிலையத்தில் லேண்டிங் செய்வது கொஞ்சம் சவாலான பணி என்று சொல்லப்படுகிறது. விமானத்தின் வேகத்தை துல்லியமான அளவுக்கு கொண்டு வந்து தரையிறக்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. விமான நிலைய ஓடுபாதையை நீளமாக்கும் பணிக்காக அருகில் உள்ள இடங்களை கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடிகார கோபுரம்
விமான நிலையத்திற்கு அருகிலேயே பாட்னாவில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்துள்ளன. தலைமை செயலகத்தின் கிளாக் டவர் உள்ளது. கடிகார கோபுரம் காரணமாக விமானத்தை 3.25 டூ 3.5 டிகிரி செங்குத்தான கோணத்தில் விமானத்தை தரையிறக்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இதனால், லேண்டிங் செய்வது என்பது கொஞ்சம் அதிக ரிஸ்க் ஆன ஒன்றாக இந்த பாட்னா ஜெய் பிரகாஷ் நாராயண சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் ஒன்று என சொல்கிறார்கள். குறிப்பாக பனிமூட்டம் மற்றும் சவாலான கால நிலைகளின் போது இந்த பணி கொஞ்சம் கடினமானது என்று தெரிவித்தனர். எனவே, இந்த பாரம்பரிய டவர் கிளாக்கை 17.5 மீட்டர் உயரம் குறைக்கும் திட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications