"எனக்கு இருப்பது இந்திய டிஎன்ஏ.." இந்தோனேசிய அதிபர் அடுத்து சொன்ன விஷயம்! வெடித்து சிரித்த மோடி
டெல்லி: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியாவுக்கு வந்துள்ள சூழலில் அவருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தார். அப்போது தனது உடலில் இந்திய டிஎன்ஏ தான் இருப்பதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கூறிய நிலையில், அதைக் கேட்டவுடன் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஒரு நொடி ஸ்டன் ஆகினர். இது குறித்து நாம் பார்க்கலாம்.
பசிபிக் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு இந்தோனேசியா. 27 கோடி மக்களைக் கொண்ட இந்தோனேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல காலமாகவே நல்லுறவு இருந்து வருகிறது.

இந்தியா பயணம்:
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் குடியரசு தின விழா கொண்டாட்டத்திலும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இரு நாட்டு உறவு, வர்த்தகம் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஜனாதிபதி திரௌபதி முர்மு அளித்த இரவு விருந்தில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்றார்.
இந்திய டிஎன்ஏ:
அப்போது தனக்கு இருப்பது "இந்திய டிஎன்ஏ" என பிரபோவோ குறிப்பிட இதைக் கேட்டதும் குடியரசுத் தலைவர் முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஒரு நொடி ஸ்டன் ஆகிவிட்டார். ஏனென்றால் பிரபோவோ ஏதோ சீரியஸாக கூறுவது போல டக்கென இதைக் கூறிவிட்டார். இதனால் ஒரு நொடி ஸ்டன் ஆன தலைவர்கள், அதன் பிறகு வாய்விட்டுச் சிரித்தனர். இந்தியாவுடனான தனது பிணைப்பு குறித்துப் பேசும்போது பிரபோவோ இந்த கருத்தைத் தெரிவித்தார்.
இரவு விருந்தில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பேசுகையில், "சில வாரங்களுக்கு நான் எனது மரபணு வரிசை முறை சோதனை செய்தேன். எனது டிஎன்ஏவைுயும் டெஸ்டிற்கு அனுப்பினேன். அப்போது அவர்கள் எனக்கு இந்திய டிஎன்ஏ இருப்பதாகச் சொன்னார்கள். நான் இந்திய மியூசிக்கை கேட்டாலே டான்ஸ் ஆட தொடங்கிவிடுவேன்.

வலுவான பிணைப்பு:
இந்தியாவும் இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பண்டைக் கால நாகரீக இணைப்புகள் உள்ளன. இப்போதும் கூட நமது மொழியின் முக்கியமான பகுதிகள் சமஸ்கிருதத்திலிருந்து தான் வருகிறது. இந்தோனேசிய மக்களின் பெயர்களும் கூட சமஸ்கிருதப் பெயர்களாகவே உள்ளன. எங்கள் மக்களிடையே பண்டைய இந்திய நாகரிகத்தின் தாக்கம் வலிமையாக உள்ளது. இது நமது ஜெனிடிக்ஸ் என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும் வறுமையை ஒழிப்பதில் மோடி காட்டி வரும் அர்ப்பணிப்பையும் அதிபர் சுபியாண்டோ பாராட்டினார். இந்த சில நாட்களில் பிரதமர் மோடியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் அதிபர் சுபியாண்டோ குறிப்பிட்டார்.
பெருமைப்படுகிறேன்:
தொடர்ந்து பேசிய அதிபர் சுபியாண்டோ, "நான் இங்கே (இந்தியாவில்) இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்... நான் 24 மணி நேரமும் அரசியல் செய்யும் நபர் இல்லை. நான் ராஜதந்திரியும் இல்லை. நான் என் மனதில் உள்ளதைச் சொல்கிறேன். நான் இந்த சில நாட்களில் பிரதமர் மோடியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சமூகத்தில் நலிவடைந்தோருக்கு உதவுவதிலும் அவர் காட்டும் அர்ப்பணிப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது" என்றார்.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்!












Click it and Unblock the Notifications