இன்போசிஸ் இணை நிறுவனர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.. என்ன நடந்தது?
டெல்லி: இன்போசிஸ் இணை நிறுவனரான சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்பட 18 பேர் மீது எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சியில் பணியாற்றிய பேராசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் சதாசிவ் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.. இவர் மீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஐஐஎஸ்சி இயக்குனர் பல்ரம் உள்பட 16 பேருக்கு எதிராக எஸ்சி/எஸ்டி வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின இனமான போவி சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஐஐஎஸ்சியில் பேராசிரியராக இருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில், வழக்கு ஒன்றில் தவறாக சிக்க வைக்கப்பட்டதாகவும் அதன்பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் புகாரளித்து இருந்தார்.
மேலும், தன்னை சாதிய ரீதியாக திட்டியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தான், கோவிந்த ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஷ்வஸ்ரையா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பல்ராம், பி ஹமலதா மிஷி, சோட்டபடையா கே, பிரதீப் டி சவகர், மனோகரன் ஆகியோர் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குப் பதிவு தொடர்பாக ஐஐஎஸ்சி தரப்பிலோ, இன்போஸிஸ் இணை நிறுவனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தரப்பிலோ எந்த ஒரு கருத்தும் உடனடியாக தெரிவிக்கவில்லை. இன்போசிஸ் இணை நிறுவனராக கோபாலகிருஷ்ணன், இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவராக 2011- 2014 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
அதேபோல, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மேலாண்மை இயக்குனராகவும் 2007 - 2011 ஆம் ஆண்டு வரை இருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதும் வழங்கியுள்ளது. ஐஐடி சென்னையில் இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை பட்டம் படித்துள்ளார்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications