மூடப்பட்ட அறைகள்.. நிர்மலா சீதாராமன் வந்ததும்.. வேலையை ஆரம்பிச்சிட்டாங்களே.. இதுதான் நடக்க போகுது
டெல்லி: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை மீண்டும் வழங்கப்பட்டு உள்ள நிலையில் அந்த துறை தொடர்பான முக்கியமான சில பொறுப்புகளை அவர் மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.
ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் இந்த முறையும் தேர்தலை சந்திக்காமல் அமைச்சராகி இருக்கிறார். அவர் அமைச்சரான நிலையில் நிதித்துறை அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டு உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் நியமன எம்பிக்களுக்கு பெரிதாக அமைச்சரவை பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று எதிர்பாக்கப்பட்டது. அதை மீறி ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் அமைச்சராகி உள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் நாட்டில் மைனாரிட்டி ஆட்சி அமைக்கப்பட உள்ளது. பாஜகவிற்கு தேர்தல் தோல்வியை விட மைனாரிட்டி ஆட்சி அமைப்பது என்பது மிக பெரிய தோல்வி.
தோல்விக்கு காரணம் நிர்மலாவா?: பாஜகவின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பலர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இது போக பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் மீது டெல்லி பாஜக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறதாம். அவரின் ஜிஎஸ்டி கொள்கைகள் பாஜக தோற்க முக்கிய காரணமாக அமைந்தது. அவர் மக்கள் மீது மிக அதிகமாக வரி விதித்தது பாஜகவின் தோல்விக்கு மிக பெரிய காரணமாக அமைந்தது.
அவரின் செயல்பாடுகள், கோபமான பதில்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாத செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. கொங்கு மண்டலத்தில் பாஜக மண்ணை கவ்வ ஜிஎஸ்டி ஒரு பெரிய காரணம்.
நிர்மலா சீதாராமன் பதவி மாற்றம்: இந்த நிலையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு எண்டு கார்டு போட பாஜக முடிவு செய்ததாக செய்திகள் வந்தன. அவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி உண்டு ஆனால் சிறிய பதவிதான். இதனால் இந்த முறை வேறு ஒருவர் நிதி அமைச்சர் ஆகிறார் என்று கூறப்பட்டது. பெரிதும் நியமன எம்பிக்களுக்கு பெரிதாக அமைச்சரவை பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று எதிர்பாக்கப்பட்டது. அதை மீறி ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் அமைச்சராகி உள்ளார்.
நிதி அமைச்சர்; இந்த நிலையில் நிதி அமைச்சராக இரண்டு பேரின் பெயர் பரிந்துரையில் இருந்தது. ஒருவர் அமித் ஷா, இன்னொருவர் பியூஷ் கோயல். இருவரில் ஒருவர் நிதி அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது..
அமித் ஷா நிதி அமைச்சர் ஆனால் உள்துறையை அவர் கவனிக்க முடியாது. இதனால் அது சிவராஜ் சிங் சவுகானுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கணிப்புகளை எல்லாம் மீறி நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித்துறை வழங்கப்பட்டு உள்ளது.
பணிகள் தொடக்கம்: இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை பட்ஜெட் கூட்ட தொடரில் அடுத்த மாதம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
இதற்காக தற்போது நிதித்துறை அலுவலகம் இயங்க தொடங்கி உள்ளது. இதற்காக அந்த அலுவலகம் வெளியாட்கள், மற்ற துறையினர் வருகையை அனுமதிக்காத வகையில் தடுக்கப்பட்டு உள்ளது. முழு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு, ஜிஎஸ்டி திருத்தங்கள், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்னொரு முக்கிய துறை: இது போக கார்ப்ரேட் நிறுவனங்களை கண்காணிக்கும், அது தொடர்பான முடிவுகளை எடுக்கும் கார்ப்ரேட் நலத்துறையும் நிர்மலா சீதாராமன் கைக்கு சென்றுள்ளது. இந்த முறை கூடுதலாக இந்த பொறுப்பு அவரிடம் சென்றுள்ளதால் ஸ்டார்ட் அப், கார்ப்ரேட் நிறுவனங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகளை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications