தமிழர்களின் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த 'சிங்களர்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடியிடம், ஈழத் தமிழர்கள்ன் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முன்வைத்தது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு தரப்பு தலைவர்களை சந்தித்து பேசினார்.

Modi srilanka tamilnadu

இலங்கை ஜனாதிபதி (அதிபர்) அனுர குமார திசநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களின் தலைவர்கள் உள்ளிட்டோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். மேலும் இந்தியா- இலங்கை இடையே பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

மேலும் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு இரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.


இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் எனெஅ தாம் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்
மேலும் சவாலான காலங்களில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி.

யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்குமாறு முன்மொழியப்பட்டமையானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+