டெல்லியில் ரூ.5,600 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. காங்கிரசை சுற்றி வீசும் அரசியல் புயல்.. பாஜக புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இதுதான். இது போதை பொருள் கடத்தல் என்பதை தாண்டி அரசியல் ரீதியான சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. முன்னாள் காங்கிரஸ் இளைஞரணி தலைவருக்கும் இந்த போதை பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க தீவிர விமர்சனங்களை வைத்து உள்ளது. காங்கிரஸ் இந்த விமர்சனங்களை மறுத்துள்ள போதிலும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க.வேண்டும்.. உண்மை என்ன என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த போதை பொருள் விவகாரம் குறித்து இங்கே பார்க்கலாம்.

போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் என்பது போலீசாரின் மிகப்பெரிய வெற்றியாகும். தெற்கு டெல்லியில் 560 கிலோவுக்கும் அதிகமான கோகோயின் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது உள்துறையின் சிறப்பான செயல்பாட்டையே காட்டுகிறது. இதன் மூலம் டெல்லியில் இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் சிண்டிகேட் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் துஷார் கோயல் என்பவர் தான் போதைப்பொருள் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

delhi

இந்த துஷார் கோயல்தான் காங்கிரசுக்கு பெரிய சிக்கலாக உருவெடுத்து உள்ளார். டெல்லி பிரதேச இளைஞர் காங்கிரஸின் ஆர்டிஐ பிரிவின் தலைவராக துஷார் கோயல் பணியாற்றினார் என்று பாஜக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. காங்கிரஸ் இதை பற்றி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது.

காங்கிரசுக்கும் கோயலுக்கும் இருப்பதாக கூறப்படும் தொடர்பு.. மிகப்பெரிய அரசியல் புயலை கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா போன்ற பாஜக மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தில் காங்கிரஸின் பங்கு குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் இளைஞர்களை போதைப்பொருட்களைநோக்கி தள்ளுவதாகவும், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்

பாஜக சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், போதைப்பொருள் மூலம் வரும் பணம் நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு நிதியளிக்கும் நோக்கம் கொண்டதா என்றும் பாஜக கேட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடாவை விமர்சிக்கும் வகையில், பாஜக இந்த கேள்விகளை எழுப்பி இருந்தது. நான்கு மாநிலங்களில் நடக்க உள்ள தேர்தல்களுக்கு சற்று முன்னதாக வந்திருக்கும் இந்த போதை பொருள் மிகப்பெரிய சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பாமல் இல்லை.

பெரிய கேள்விகள்:

இந்த போதைப்பொருள் சிண்டிகேட்டுடன் காங்கிரசுக்கு தொடர்புள்ளதா?

பாஜக இந்த விவகாரத்தில் எழுப்பிய மிக நேரடியான கேள்வி ஒன்றுதான்.. காங்கிரஸ் கட்சியுடன் கோயலுக்கு உள்ளதா?. காங்கிரஸ் கட்சியில் கோயலின் பங்கை முழுமையாக ஆராய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சமீபத்தில் 2022 ஆம் ஆண்டு டெல்லி பிரதேச இளைஞர் காங்கிரஸின் RTI செல் தலைவர் பதவியை கோயல் வகித்தார். முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் கோயல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி குற்றச்சாட்டுகளை பெரிதாக்கி உள்ளது. இதற்கெல்லாம் காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும் பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த போதைப்பொருள் பணம் தேர்தல் செலவிற்காகவா?

இந்த போதைப்பொருள் பணம் ஹரியானா தேர்தலில் பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது. இந்த புகார் மட்டும் நிரூபிக்கப்பட்டால்.. போதை பொருள் நெட்வொர்க்கிற்கும்.. அரசியலுக்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை அது வெளியே கொண்டு வரும். இந்த ஆண்டு மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்க அளவில் கவனம் பெறுகிறது.

delhi

குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸின் பதில்:

துஷார் கோயலுக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் மறுத்துள்ளது. பாஜகவின் குற்றச்சாட்டுகளை.. ஹரியானா தேர்தலுக்கு முன்னதாக வேண்டுமென்றே வைக்கப்படும் அவதூறு பிரச்சாரம் என்று காங்கிரஸ் கூறியது.

டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் கீழ், இந்த சர்வதேச போதைப்பொருள் சிண்டிகேட்டில் கோயலின் தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீஸ் வட்டாரங்களின்படி, கோயலுக்கு மத்திய கிழக்கு நாடுகளுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. கோயல்தான் இந்தியா முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்று நம்பப்படுகிறது. காங்கிரஸில் அவரின் தொடர்பு உறுதி செய்யப்பட்டால்.. அந்த கட்சிக்கு அது மிகப்பெரிய சிக்கலாக மாறும். முக்கியமாக அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு பெரிய அளவில் அழுத்தத்தை கொடுக்கும்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ்தான் போதை பொருள் பயன்பாடு அதிகரித்தது. அதை நினைவுகூர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இது போல உறுதியாக எடுக்கப்படவில்லை, பாஜக ஆட்சியில்தான் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.. போதை பொருள் தடுப்பில் பாஜக எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார். போதை பொருள் என்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கும்.. பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்று. இதில் காங்கிரஸ் கட்சி மீது வைக்கப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் அந்த கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+