3 நாள் சிகிச்சைக்கு நோ அனுமதி.. ப. சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீனும் கிடையாது.. டெல்லி ஹைகோர்ட்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் அளிக்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் அளிக்க முடியாது என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும்.

2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில்தான் ப. சிதம்பரம் சிக்கி உள்ளார்.

இரண்டு வழக்குகள்

இரண்டு வழக்குகள்

இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 15 நாள் விசாரணைக்கு பிறகு, ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 ஜாமீன் கிடைத்தது

ஜாமீன் கிடைத்தது

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தது. இவர் கடந்த 14 நாட்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் சிபிஐ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நேற்று அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்படாமல், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் ப. சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

மனு தாக்கல்

மனு தாக்கல்

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். ப. சிதம்பரம் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.அதனால் இவருக்கு சிகிச்சை பெற வேண்டும். ஆகவே 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

என்ன விசாரணை

என்ன விசாரணை

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ப. சிதம்பரத்திற்கு உடனே சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று அவரின் தரப்பு வாதம் செய்தது. ஆனால் ப. சிதம்பரத்திற்கு சரியாக சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் அவர் சிகிச்சை பெறுகிறார்.

இல்லை

இல்லை

அதோடு அவருக்கு வீட்டு உணவு வழங்கப்படுகிறது என்று அரசு தரப்பு வாதம் வைத்தது. அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுரேஷ் குமார் கெய்த், ப. சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிவிட்டார். மேலும் ப. சிதம்பரம் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் நாளை அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+