கட்டுப்பாடுகள்.. சம்பிரதாயங்கள்.. திகார் சிறையிலிருந்து ப. சிதம்பரம் எப்படி விடுதலை செய்யப்படுவார்?
திகார் சிறையில் இருந்து ப. சிதம்பரம் இன்று எப்படி விடுதலை செய்யப்படுவார், மதியம் எப்படி வெளியே வருவார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி: திகார் சிறையில் இருந்து ப. சிதம்பரம் இன்று எப்படி விடுதலை செய்யப்படுவார், மதியம் எப்படி வெளியே வருவார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதன் மூலம் 106 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வருகிறார். உச்ச நீதிமன்றம் ப. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவில் இந்த நிபந்தனை ஜாமீனை அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இந்த வழக்கில் ப. சிதம்பரம் இன்று எப்படி விடுதலை செய்யப்படுவார், மதியம் எப்படி வெளியே வருவார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,
உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் தீர்ப்பு இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் அளிக்கப்படும்.
அந்த ஜாமீன் தீர்ப்பு நகலை அவர்கள் திகார் சிறையில் கொடுப்பார்கள். ஏனென்றால் ஐஎன்எக்ஸ் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்தான் விசாரித்து வருகிறது.
அதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியத்திற்குள் ப. சிதம்பரம் தன்னுடைய பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
அதற்கு அடுத்து நீதிமன்றத்திடம் லட்சம் ரூபாய் வரை பாண்ட் செலுத்த வேண்டும், 2 பிணைகள் அவர் அளிக்க வேண்டும்.
இதை எல்லாம் பரிசோதித்த பின் நிபந்தனை ஜாமீன் பத்திரங்களில் ப. சிதம்பரம் கையெழுத்திடுவார்.
அதன்பின் அவருக்கு ஜாமீன் வழங்க திகார் சிறை நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கும்.
பின் இன்று மதியம் 2 மணி அளவில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications