30 வருட அமெரிக்க ஆதிக்கத்தை.. உடைத்த ஈரான்.. தயாராக இருங்க.. உலகம் பெரிய மாற்றத்தைச் சந்திக்குது
டெல்லி: கடந்த 30 ஆண்டுகளாக மத்திய கிழக்கில் 'நான்தான் ராஜா' என்று கொடி கட்டிப் பறந்த அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கத்திற்கு, ஈரான் வைத்த செக்-மேட் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்திருக்கிறது. வெறும் ஏழே நாட்களில், மூன்று தசாப்த கால கட்டுப்பாட்டை ஈரான் தவிடுபொடியாக்கியிருப்பது ராணுவ வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு அதிசயம்.

தரைமட்டமான 'THAAD': பில்லியன் டாலர் கோட்டையில் ஓட்டை!
அமெரிக்காவின் தற்பெருமைக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்தது அதன் 'THAAD' (Terminal High Altitude Area Defense) ஏவுகணை தடுப்பு அமைப்புகள். ஒவ்வொன்றும் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புடையவை. அதன் ஒரு பகுதியான 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள ரேடார் அமைப்புகளை ஈரான் துல்லியமாகத் தாக்கி அழித்திருப்பது அமெரிக்காவை நிலைகுலையச் செய்துள்ளது.
உலகம் முழுவதுமே அமெரிக்காவிடம் இருந்தது வெறும் 8 THAAD அமைப்புகள் தான்.
அதில் பாதியை (4 அமைப்புகள்) ஈரான் இந்த குறுகிய காலத்தில் காலி செய்திருக்கிறது.
ஜோர்டான், யுஏஇ (UAE), கத்தார் என வளைகுடா நாடுகள் எங்கும் பரவியிருந்த அமெரிக்காவின் 'கண்'களை (Radars) ஈரான் குருடாக்கிவிட்டது.
உளவுத்துறையின் விஸ்வரூபம்: ஈரானின் 'சர்ப்ரைஸ்' மூவ்!
ஈரான் வெறும் உணர்ச்சிவசப்படும் நாடு அல்ல, அது பல தசாப்தங்களாக இந்த ஒரு போருக்காகத் தன்னைத் தயார்படுத்தி வந்திருக்கிறது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ஈரானை ஒரு பலவீனமான எதிரியாகக் கருதிச் செய்த கணக்கீடுகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்களைக் காட்டிலும், ஈரானின் உளவுப்பிரிவு மற்றும் இலக்குகளைத் தாக்கும் வேகம் (Targeting Intelligence) ராணுவ நிபுணர்களை வாயடைக்க வைத்திருக்கிறது. "அமெரிக்காவை விட பலவீனமான நாடு, எப்படி இவ்வளவு பலமான சக்தியை முடக்கியது?" என்பதுதான் இப்போது உலக நாடுகளின் ஹாட் டாபிக்.
டிரம்ப்பின் அடுத்த நகர்வு என்ன?
அமெரிக்க ராணுவம் இவ்வளவு மோசமாகப் பின்வாங்குவதை உலக நாடுகள் ஒருவித புன்னகையுடனேயே கவனித்து வருகின்றன. வழக்கமான ஆயுதங்களைக் கொண்டு ஈரானை வீழ்த்துவது இனி சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இப்போதுள்ள நிலையில், ஈரானைப் பணிய வைக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர டிரம்பிற்கு வேறு வழியில்லை என்கிற அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.
வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பாதுகாப்பு வளையம் (Missile Defense Batteries) சிதைந்து போயுள்ளதால், இனி வரும் தாக்குதல்களைச் சமாளிப்பது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என வாஷிங்டன் அதிகாரிகளே ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
30 வருட சாம்ராஜ்யம் சரிந்து விழுகிறது. புதிய வல்லரசாக ஈரான் உருவெடுக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
அமெரிக்காவையே 'குருடாக்கிய' ஈரானின் அசாத்திய வியூகம்!
இந்த யுத்தத்தில் ஈரானின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, அவர்கள் கையாண்ட 'நவீன கால கொரில்லா போர்முறை' (Modern Hybrid Warfare). அமெரிக்கா தன் பில்லியன் டாலர் மதிப்பிலான 'THAAD' மற்றும் 'பேட்ரியாட்' தடுப்பு அமைப்புகளை முழுமையாக நம்பியிருந்த நிலையில், ஈரான் மிக மலிவான விலையிலான 'சுயக் கட்டுப்பாட்டு ட்ரோன்களை' (Kamikaze Drones) பெருமளவில் ஏவி அவற்றை நிலைகுலையச் செய்தது.
ஒருபுறம் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தளங்களை துல்லியமான ஏவுகணைகளால் தாக்கிவிட்டு, அதே சமயம் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடி உலகப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பையே ஈரான் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. 30 ஆண்டுகளாக அமெரிக்கா கட்டி எழுப்பிய பாதுகாப்பு அரண், ஈரானின் இந்தத் திட்டமிட்ட 'ரேடார் அழிப்பு' (Blinding the Enemy) நடவடிக்கையால் செயலிழந்து போயிருக்கிறது. குறிப்பாக, அரபு நாடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி தளம் அமைத்த அமெரிக்காவால், இப்போது அந்த நாடுகளையே பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் ஈரான் பெற்றுள்ள மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army!












Click it and Unblock the Notifications