ஈரானை அடிச்சா இந்தியாவுக்கு வலிக்கும்.. ஒரே ஒரு நல்லது மட்டும் நடந்துருக்கு! இனிமேல் தான் சிக்கலே!
டெல்லி: அமெரிக்கா - இஸ்ரேல் -ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த போர் காரணமாக இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக இந்திய உள்நாட்டு சந்தையில் பாசுமதி அரிசி விலை குறையும் நிலையும் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இந்த போர் காரணமாக பல நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக எரிசக்தி மற்றும் வர்த்தக துறைகளில் இந்த தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி நடைபெறும் வழித்தடங்களில் இடையூறு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஈரான் இஸ்ரேல் போர்
இதனால் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயரக்கூடும் என்பதால் பல நாடுகள் அதனை கவனமாக கண்காணித்து வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவிலும் எரிசக்தி துறையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 11 மாதங்களுக்கு பிறகு இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு
நாட்டில் எரிசக்தி பொருட்களின் தட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நடைபெறும் பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசி தற்போது தடைபட்டுள்ளது.
பாசுமதி அரிசி
இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் முக்கிய கடல்சார் வழித்தடங்களில் ஒன்றாக ஹேர்மூஸ் நீரிணை உள்ளது. இந்த நீரிணை வழியாக பல சரக்கு கப்பல்கள் தினசரி பயணம் செய்கின்றன. ஆனால் தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பாதையில் செல்லும் கப்பல்களை ஈரான் குறிவைத்து தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்த வழியாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சரக்கு கப்பல் போக்குவரத்து
இதனால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. போரின் தாக்கம் காரணமாக சரக்கு கப்பல் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு கொள்கலனுக்கான போக்குவரத்து செலவு 3,500 டாலராக இருந்த நிலையில் தற்போது அது 4,500 டாலராக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமையால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சுமார் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி தற்போது அனுப்ப முடியாமல் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரிசி விலை குறைவு
குறிப்பாக துபாய், ஆப்கானிஸ்தான் மற்றும் கஜஹஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நடைபெறும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் செல்லும் நிலவழிப் பாதை ஏற்கெனவே மூடப்பட்டுள்ளதால், அந்த நாட்டிற்கு தற்போது ஈரான் வழியாக கடல் அல்லது சாலைப் போக்குவரத்து மூலம் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால் ஈரானில் போர் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த வழித்தடமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாசுமதி அரிசி
இதனால் ஆப்கான் மற்றும் கஜஹஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் அரிசி ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரான் மற்றும் துபாய் துறைமுகங்களிலும் பாசுமதி அரிசி சரக்குகள் தேங்கி கிடப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் டன் பாசுமதி அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் 17 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உற்பத்தி நடைபெறுகிறது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய உள்நாட்டு சந்தை
ஏற்றுமதி தடைபட்டதால் தற்போது இந்திய உள்நாட்டு சந்தையில் பாசுமதி அரிசி அதிகமாக தேங்கி வருகிறது. இதன் காரணமாக விலை குறையும் நிலை உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் பாசுமதி அரிசி விலை சுமார் 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குவிண்டாலுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய கடல் எல்லையை நோக்கி சென்ற பாசுமதி அரிசி ஏற்றப்பட்ட சில கப்பல்கள் திரும்பி வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை!












Click it and Unblock the Notifications