Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகை உலுக்கிய ஈரான் அதிபர் ரைசி மரணம்- இந்தியாவில் இன்று துக்க தினம்- அரைக்கம்பத்தில் தேசியக் கொடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம் அடைந்ததால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று நமது நாடு துக்க தினத்தை அனுசரிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

Iran President Raisi s death India observes state mourning today

ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் மரணமடடைந்த செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியை தந்துள்ளது. இந்தியா- ஈரான் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர். ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் இந்திய மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

Iran President Raisi s death India observes state mourning today

இதனிடையே மறைந்த ஈரான் அதிபர் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 'இந்தியா' முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் ரைசியின் மரணத்துக்கு காரணம் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+