ஈரான் அமெரிக்கா போர் நிறுத்தம்.. சிலிண்டர் பிரச்சனை எப்போதுதான் தீரும்? இப்படி ஒரு சிக்கல் இருக்கா?
டெல்லி: ஈரான் அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் நம் நாட்டில் எப்போது சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை சீராகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் போர் முழுமையாக நிறுத்தப்பட்டால் 3 முதல் ஆறு வாரங்களில் எல்பிஜி விநியோகம் படிப்படியாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும்.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வந்தது. ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியது. அதேபோல ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியது.

வணிக சிலிண்டர் விநியோகம் பாதிப்பு
உலக வர்த்தக எண்னெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடப்பதால் சர்வதேச அளவில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக எதிரொலித்தது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
வீட்டு உபயோக சிலிண்டர் கூட தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. ஆனால் வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஹோட்டல்கள் எரிவாயு கிடைக்காமல் திண்டாடின. உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியையும் உடனடியாக திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
நெருக்கடி இன்றி கிடைக்குமா?
ஹார்முஸ் ஜலசந்தி அருகே தேங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான கப்பல்கள் இனி தங்கள் பயணத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எண்ணெய் விநியோகம் சீராகும். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர் வழக்கம் போல நெருக்கடி இன்றி கிடைக்குமா? என்பதே இந்தியர்களின் கேள்வியாக உள்ளது.
ஆனால், இதற்கு நேரடியாக பதில் சொல்வது என்றால் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை நிபந்தனையுடனே ஈரான் திறந்துள்ளது. அதாவது, ஈரான் முன்வைத்த 10 அம்ச திட்டத்தில், கட்டுப்படுத்தப்பட்ட கடற்பாதை நடைமுறை என்றே கூறியுள்ளது.
3 முதல் 6 வாரங்களில்
எனவே எந்த கப்பல்கள் எப்போது செல்ல வேண்டும் என்பதில் இறுதி கட்டுப்பாடு ஈரானிடமே இருக்கும். எனவே இது முழுமையான திறந்த பாதையாக இருக்காது சண்டை நிறுத்தம் தற்போதைக்கு 2 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்க ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருந்தால், அடுத்த 3 முதல் ஆறு வாரங்களில் எல்பிஜி விநியோகம் படிப்படியாக சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும். அதாவது, தற்போதைய சூழல் நீடித்து ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருந்தாலும் கூட எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்பதே நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது
இந்தியா தனது எரிவாயு தேவைக்கு பெரும்பங்கு இறக்குமதியை நம்பியிருந்தாலும் இந்த இக்கட்டான சூழலை திறம்பட கையாண்டு பெரிய அளவில் பாதிப்பு இன்றி பார்த்துக்கொண்டது. புலம் பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 5 கிலோ சிலிண்டர் விநியோகத்தை இரு மடங்காக அதிகரித்தது.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications