வெறும் 2மணி நேரம் தாமதம்.. ரூ4 லட்சத்தை இழப்பீடாக வழங்கிய ரயில்வே.. வேறெங்கும் இல்லை இந்தியாவில்தான்
டெல்லி: கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமானதால் அதில் பயணித்த 2035 பயணிகளுக்கு 4.5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மிக முக்கியமான பொது போக்குவரத்துகளில் ஒன்று இந்தியன் ரயில்வே, ஒவ்வொரு ஆண்டு கோடிக் கணக்கான மக்கள் ரயில்களிலேயே இந்திய ரயில்களில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாகத் தாமதமாக இயக்கப்பட்ட ரயிலில் பயணித்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ரயில்கள்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு ரயில்கள் மூலம் விரைவாகச் சென்றுவிடலாம். அதேபோல விலையும் குறைவு என்பதால் பலரும் ரயில்கள் மூலமே பயணிக்க விரும்புகின்றனர். ஆனால், சரியான நேரத்தில் ரயில்கள் இயங்குவதில்லை என்ற புகார்கள் நீண்க காலமாகவே இங்கு உள்ளன. இங்குப் பல மணி நேரம் வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

ரூ 4.5 லட்சம் இழப்பீடு
ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரயில்கள் நிமிடங்களில் தாமதமானால்கூட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். ஆனால், இந்தியாவில் பல மணி நேரம் வரை தாமதமானாலும் கூட பெரும்பாலும் இழப்பீடுகள் வழங்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாமதமான லக்னோ - டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தாமதமானதால் அதில் பயணித்த 2035 பயணிகளுக்கு 4.5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

என்ன ஆச்சு
கடந்த சனிக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக டெல்லி அருகிலுள்ள சிக்னலில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் லக்னோ - டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை 2.5 மணி நேரம் தாமதமானது. அதேபோல ஞாயிற்றுக்கிழமையும் ஒரு மணி நேரம் தாமதமானது. இதால், 2 மணி நேரம் தாமதமான சனிக்கிழமை ரயிலில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் 200 ரூபாயையும், ஒரு மணி நேரம் தாமதமான ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் 100 ரூபாயையும் இழப்பீடாக வழங்க இந்தியன் ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. மொத்தம் 4.49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் முதல்முறை
இது குறித்து ஐஆர்சிடிசியின் முதன்மை மண்டல மேலாளர் அஜித்குமார் சின்ஹா கூறுகையில், "இது போலப் பயணித்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படுவது இதுவே முதல்முறை. சனிக்கிழமை பயணித்த 1,574 பேருக்கு ரூ .3,93,500, ஞாயிற்றுக்கிழமை பயணித்த 561 பேர் தலா 100 ரூபாய் விகிதம் இழப்பீடு வழங்கப்படும். அதாவது மொத்தம் 2,035 பயணிகளுக்கு இழப்பீடாக ரூ .4,49,600 கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

36 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராசாஹேப் டான்வே , "இந்திய ரயில்வே துறைக்குப் பயணிகள் ரயில் என்பது நஷ்டத்தில் இயங்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. ரயில் கட்டணத்தை அதிகரித்தால் ரயில்களில் பயணிப்போர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதை எங்களால் செய்ய முடியாது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் மட்டும் ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications